சுவையான நெய் சோறு - தோசைக்காய் தயிர் பச்சடி செய்யலாமா?

ghee rice-dosakai curd pie
ghee rice - dosakai curd pie
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான நெய் சோறு மற்றும் தோசைக்காய் தயிர் பச்சடி ரெசிபியை சிம்பாளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்.

நெய்-2 தேக்கரண்டி

எண்ணெய்-2 தேக்கரண்டி

பட்டை-2

கிராம்பு-3

ஏலக்காய்-3

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

கொத்தமல்லி-சிறிதளவு

புதினா-சிறிதளவு

பிரியாணி இலை-1

அரிசி-1 கப்

தேங்காய் பால்-2 கப்

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி

உப்பு-தேவையான அளவு

நெய் சோறு செய்முறை விளக்கம்.

முதலில் குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இதில் 2 பட்டை, 3 ஏலக்காய், 3 கிராம்பு, பிரியாணி இலை 1, நறுக்கிய பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1 சேர்த்து நன்றாக வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு, புதினா சிறிதளவு, தேங்காய் பால் 2 கப், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் கழுவி வைத்திருக்கும் அரிசி 1 கப்பை சேர்த்துவிட்டு குக்கரில் 2 விசில் வரும் வரை விட்டுவிடுங்கள். அவ்வளவு தான் சுவையாற நெய் சோறு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

தோசைக்காய் தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்.

தோசைக்காய்-1 கப்

உப்பு-தேவையான அளவு

தேங்காய்-1 கைப்பிடி

சீரகம்-1 தேக்கரண்டி

கடுகு-1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய்-2

தயிர்-1 கப்

தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி

கடுகு-1 தேக்கரண்டி

கருவேப்பிலை-சிறிதளவு

வரமிளகாய்-2

தோசைக்காய் தயிர் பச்சடி செய்முறை விளக்கம்.

தோசைக்காயை தோலை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி கடாயில் தண்ணீர் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் கைப்பிடி அளவு தேங்காய், 1 தேக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய் 2, கடுகு ¼ தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இதை வெந்த தோசைக்காயில் சேர்த்து நன்றாக கொதிவர விடவும். நன்றாக கொதித்ததும் அடித்து வைத்திருக்கும் தயிர் 1 கப், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும். இப்போது தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டியில் கடுகு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 2 சேர்த்து தாளித்து சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான தோசைக்காய் தயிர் பச்சடி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி இட்லி - தேங்காய் மாங்காய் துவையல் ரெசிபிஸ்!
ghee rice-dosakai curd pie
logo
Kalki Online
kalkionline.com