
குடமிளகாய் சாதம்:
உதிராக வடித்த சாதம் 2 கப்
சிவப்பு குடைமிளகாய் 1/4 கப்
பச்சை குடைமிளகாய் 1/4 கப்
மஞ்சள் குடைமிளகாய் 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
எண்ணெய் 4 ஸ்பூன்
சிகப்பு, பச்சை, மஞ்சள் மூன்று குடைமிளகாய்களையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதில் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மெல்லியதாக நறுக்கிய குடைமிளகாய்களை போட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தட்டைப் போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். இதில் உதிர் உதிராக வடித்த சாதம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளறிவிட சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார்.
குடமிளகாய் தொக்கு:
குடமிளகாய் 4
வெங்காயம் 2
உப்பு தேவையானது
புளி நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
குடைமிளகாய், வெங்காயம் இரண்டையும் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், நார், கொட்டை நீக்கிய புளி மூன்றையும் போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் நிறம் மாறியதும் தட்டில் கொட்டி ஆற விடவும். சிறிது ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் போட்டு நன்கு சுருளக்கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துகிளற அடி பிடிக்காது. நன்கு சுருள வந்ததும் இறக்கவும். காரசாரமான குடைமிளகாய் தொக்கு தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.