
கத்தரிக்காயை வெச்சி இரண்டு ரெசிபி இப்ப பார்க்க போறோம். இரண்டுமே செம்ம டேஸ்டா இருக்கும்.
1) கத்தரிக்காய் சோக்கா ரெசிபி:
* இரண்டு அல்லது மூன்று கத்தரிக்காயை சுட்டு தோலுரித்து வைத்து கொள்ளவும். நீளமான அல்லது குண்டு கத்தரிக்காய் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், குறிப்பாக நீல நிற கத்தரிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை நிறக் கத்தரிக்காய் இந்த dishகு டேஸ்டாக இருக்காது.
* இரண்டு medium size உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
* இரண்டு தக்காளியை தோசைக் கல்லில் அல்லது grill ல் வைத்து சுட்டு தோலுரித்து வைக்கவும்.
* இப்போது ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, சுட்ட கத்தரிக்காய் மற்றும் சுட்ட தக்காளியைப் போட்டு நன்றாக மசிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் (ஒரு வெங்காயம் போதுமானது), ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு கலக்கவும்.
மேலே இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய் அல்லது normal refined oil ஐ ஊற்றி mix செய்யவும். ரெடி ஆகி விட்டது கத்தரிக்காய் சோகா, மிகவும் சுலபமாக செய்திடலாம். இதை டால் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டு கொள்ளலாம்.
2) அடுத்த படியாக கத்தரிக்காய் பர்த்தா ரெசிபியைப் பார்ப்போம்:
* இரண்டு பெரிய மற்றும் குண்டு நீல நிறக் கத்தரிக்காயை சுட்டு தோலுரித்து கொள்ளவேண்டும். பர்த்தா செய்வதற்கு நீல நிற குண்டு கத்தரிக்காயை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.
* வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகை தாளிக்க வேண்டும்.
* மூன்று தக்காளி, இரண்டு வெங்காயம், 3 பச்சை மிளகாய் மற்றும் ஒரு துண்டு இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி போடவும்.
*ஆறு அல்லது ஏழு பூண்டு பல்லை நசுக்கி போடவும்.
* ஒரு கைப்பிடி பச்சை பட்டாணியைப் போடவும்.
* இப்போது இத்துடன் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தனியாத் தூள், அரை ஸ்பூன் சீரகத் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக வதக்கவும்.
* தக்காளி முழுவதும் வெந்து தொக்கு பதத்திற்கு வந்தவுடன் சுட்ட கத்தரிக்காயை நன்றாக மசித்து இத்தடன் கலக்கவும்.
* தீயை மெதுவாக வைத்து அடிக்கிடி கிளறி விட வேண்டும்.
* கத்தரிக்காய் போட்டு ஒரு பத்து நிமிடத்திற்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
* நிறம் நன்றாக மாறி brown நிறத்திற்கு வரும் போது அரை ஸ்பூன் கரம் மசாலாத் தூள் சேர்த்து கிளறி பிறகு இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
* கொத்தமல்லி இழைகளைத் தூவவும்.
சுவையான கத்தரிக்காய் பர்த்தா ரெடி. சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு தொட்டு கொள்ளலாம். வெறும் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.