சுவையான சுரைக்காய் பாயசம், பன்னீர் ஜிலேபி செய்யலாம் வாங்க!

suraikkai Payasam and Paneer Jilebi!
Samayal tips
Published on

பாயாசம், ஜிலேபி போன்ற  நாம் அடிக்கடி சாப்பிடும் உணவு பதார்த்தங்களை ஒருமுறை இப்படி மாற்றி செய்து பாருங்கள்! சுவை அள்ளும்! 

சுரைக்காய் பாயசம்:

தேவையான பொருட்கள்:

சுரைக்காய்- 1/2 கிலோ 

 நெய்-3 டேபிள்ஸ்பூன் 

 பால்-1/2 லிட்டர்

 ஏலக்காய் தூள் -1/2 டேபிள்ஸ்பூன் 

 பாதாம், முந்திரி, திராட்சை - தலா  1 டேபிள் ஸ்பூன் 

 சர்க்கரை-400 கிராம்

செய்முறை:

சுரைக்காய் நன்கு தோல் சீவி விதைப்பகுதிகளை நீக்கிக்கொள்ள வேண்டும். பின்னர்  அதனை மிகவும் மெலிதாக துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில்  நெய் சேர்த்து துருவிய சுவைக்காயை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். இதனுடன் அரை லிட்டர் பால் சேர்த்து 8 to 10 நிமிடம்  நன்கு வேகவைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சோர்வு நீக்கும் தேர்வு கால ரெசிபிகள்!
suraikkai Payasam and Paneer Jilebi!

சுரைக்காய் நன்கு வெந்து  ஓரளவுக்கு பால் வற்றியவுடன்  சிறிதளவு ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு,சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின் இதனோடு நெய்யில் வறுத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான சுரைக்காய் பாயசம் ரெடி!

பன்னீர் ஜிலேபி

 தேவையான பொருள்கள்:

பன்னீர் - 400 கிராம் 

 சர்க்கரை -500 கிராம் 

 மைதா -3 டேபிள் ஸ்பூன் 

 ரவை -3 டேபிள்ஸ்பூன் 

 சோள மாவு-1 டேபிள் ஸ்பூன் 

 குங்குமப்பூ -1சிட்டிகை 

 ஏலக்காய் தூள் -1 சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர், குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவுக்கு  சர்க்கரை பாகு தயாரித்து எடுத்துக்கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
சமையலில் அதிகமாக சேர்ந்துவிட்ட உப்பைக் குறைக்க 6 டிப்ஸ்!
suraikkai Payasam and Paneer Jilebi!

ஒரு மிக்ஸி ஜாரில் பன்னீரை எடுத்துக்கொண்டு சிறிதளவு நீர் சேர்த்து அதனை  நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன்  ரவை, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் இதனை ஒரு பாலிதீன் கவர் அல்லது ஜிலேபி கோனில் ஊற்றி எண்ணெயில் பிழிந்து  பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த ஜிலேபிகளை சர்க்கரை பாகில் 5  நிமிடம் ஊறவிட்டு எடுத்தால் சுவையான பன்னீர் ஜிலேபி ரெடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com