
மென்மையான, சுவையான மலபார் பரோட்டா, முட்டைகோஸ் தேங்காய் குழம்பு மற்றும் மசாலா கலந்த வாழைக்காய் பொரியல் ரெசிபிக்கள்.
மலபார் பரோட்டா
மலபார் பரோட்டா என்பது மிருதுவும் மெலிவுமான பல அடுக்குகளுடன் கேரளா மற்றும் தென்னிந்தியாவில் பிரபலமானது. இதை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதாமாவு – 2 கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையானது
செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை சேர்க்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி மெல்லியதாக ஒரு உருண்டையாக பிசைந்த கொள்ளவும். பிசைந்த மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். பின்னர் ஊறவைத்த மாவை எடுத்து மெல்லிய பரப்பாக நெய்யோ அல்லது எண்ணெய்யோ தேய்த்து பிரட்டவும். பிரட்டிய மாவை அடுக்குகளாக மடித்து உருண்டையாகச் செய்யவும்.
பரோட்டா வடிவமைத்தல்:
உருண்டைகளை தட்டிப்போட்டு மெல்லிய வட்டமாக பரப்பவும். தவாவில் இடம் பரவலாக பரோட்டா சேர்த்து, இரண்டு பக்கமும் நெய்யைத்தூவி பொன்னிறமாக வேக வைக்கவும்.
மலபார் பரோட்டாவை சிக்கன் கறி, மட்டன் குருமா அல்லது சால்னா போன்ற கறிகளுடன் சூடாக பரிமாறலாம்.
முட்டைக்கோஸ் தேங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
நறுக்கப்பட்ட முட்டைக்கோஸ் 11/2 கப்
துவரம்பருப்பு _1/2 கப்
மிளகாய்வற்றல் _2
கறிவேப்பிலை _சிறிது
எண்ணெய் _ 2 ஸ்பூன்
கடுகு _1 ஸ்பூன் அரைக்க:
துருவிய தேங்காய் _1/2 கப்
உப்பு_தேவைக்கு
பச்சைமிளகாய் _ 2
மஞ்சள் _ 2 சிட்டிகை
சீரகம் 2 டீஸ்பூன்
செய்முறை: முட்டைக்கோஸ் மற்றும் துவரம்பருப்பை போதுமான அளவு தண்ணீரில் வேகவைத்து ஆறவிடவும். இதற்கிடையில் தேங்காய், உப்பு, பச்சை மிளகாய், மஞ்சள், சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
அடி கனமான கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து, சீரகம் சேர்க்கவும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் உடைத்த வற்றல் மிளகாயை சேர்க்கவும்.பின் தேங்காய் விழுதைக் கலந்து, தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை கிளறவும். சமைத்த பருப்பு மற்றும் முட்டைக்கோஸ், உப்பு, சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கொதித்ததும் மூடி போட்டு வேகவிடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
மசாலா கலந்த வாழைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
நடுத்தர பச்சை வாழைக்காய் _2
கறிவேப்பிலை_ சிறிது
உளுத்தம்பருப்பு _1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் _1/2 ஸ்பூன்
சீரகத்தூள் _1/2 ஸ்பூன்
கடுகு _ 1/2 ஸ்பூன்
மஞ்சள் _ 1 டீஸ்பூன்
மல்லிஇலைகள்_ சிறிதளவு
உப்பு, எண்ணெய் _தேவைக்கு
பொடிக்க:
மிளகாய்வற்றல் _2
மல்லி விதைகள்_1 டீஸ்பூன்
உலர்ந்த புளி _ சிறிது
செய்முறை: வாழைக்காயை தோலுரித்து வட்டமாக வெட்டவும். மசாலாவிற்கு தேவையான பொருட்களை வறுத்து பொடியாக அரைக்கவும்.
அடி கனமான கடாயை சூடாக்கி, எண்ணெய், ஜீரா, கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். பெருங்காயத்தூள், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வெட்டிய வாழைக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து தொடர்ந்து வறுக்கவும். மசாலாதூள் மற்றும் இடையில் தண்ணீர் தெளித்து, வதக்கவும். இடையிடையே எண்ணெய் சேர்த்து வதக்கவும். அதனால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். பின்னர் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.