ருசியான ஸ்பெஷல் ‘க்ரீன் மூங்தால் சமோசா'!

மூங்தால் சமோசா...
மூங்தால் சமோசா...

தேவை: பச்சைப் பாசிப்பயறு – 2 கப், கரம் மசாலா – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், அம்சூர் பொடி – ½ டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 + இஞ்சி - 1 துண்டு (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), ஃபிரஷ் கொத்தமல்லி இலை – 1 கப், ரீஃபைன்டு ஆயில் – ½ லிட்டர், உப்பு, தண்ணீர் – தேவையானது.

(சமோசா பட்டி செய்வதற்குத் தேவையானவை: சலித்த மைதா மாவு – 2 கப், பேகிங் பவுடர் – சிறிது, நெய் – 1 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – கொஞ்சம், உப்பு – சிறிது)

செய்முறை: 1

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் மைதா மாவு, பேகிங் பவுடர், சிறிது உப்பு மற்றும் நெய் ஆகியவை களைப் போட்டு, நுரை வரும் வரை சேர்த்துக் கலக்கவும். பிறகு மீதி மைதாமாவைச் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். இதை நீளமாக உருட்டி, சிறு – சிறு உருண்டைகளாக தயார் செய்துகொள்ளவும். இவற்றை வட்டமாக இட்டு முக்கோண வடிவில் வெட்டி வைக்கவும். இப்போது பட்டி ரெடி.

செய்முறை: 2

பச்சைப் பாசிப்பயறை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் தோலைக் களைந்து, மிக்ஸியிலிட்டு நன்றாக, அதேசமயம் கெட்டியாக விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போக்க வதக்கிக் கொள்ளவும். இத்துடன் கரம் மசாலா, மிளகாய்ப்பொடி, அம்சூர் பொடி, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, தேவையான உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஆறிய பின்பு சிறிய உருண்டைகளாக செய்து ரெடியாக வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மாற்றம் எங்கிருந்து துவங்க வேண்டும் தெரியுமா?
மூங்தால் சமோசா...

செய்முறை: 3

முக்கோண வடிவில் ரெடியாக வைத்திருக்கும் சமோசா பட்டியினுள், மூங்தால் கலவை உருண்டையை லேசாக உதிர்த்து போட்டு முறுக்கினாற்போல பட்டியின் ஓரங்களை மூடவும்.

வாணலியில் மீதி எண்ணெயை விட்டு காய்ந்ததும், தயார் நிலையில் இருக்கும் முக்கோண வடிவு சமோசாவைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தட்டில் வைத்து மேலே கொத்தமல்லி இலைகளைப் பரவலாகத் தூவவும்.

மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும் இந்த க்ரீன் மூங்தால் சமோசாவிற்கு மொமட்டோ கெட்ச் அப் அல்லது தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com