

தினைமாவு - ஒரு கப்
நெய் - 1/2 கப்
நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்
செய்முறை :
வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும். பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வருத்து எடுக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும். பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.
சாமை அரிசி மாவு - 1/4 கப்
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 1/4 கப்
கெட்டி தேங்காய் பால் - 3/4 கப்
உப்பு தேவையான அலவு
பொரிக்க எண்ணெய்
செய்முறை :
எல்லா பொருட்களையும் நன்கு கலந்து வடை மாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சாமை அரிசி வடை ரெடி. மல்லிச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
-மகாலெட்சுமி சுப்ரமணியன்