வெங்காயம் இருந்தாலே போதும், செம டேஸ்டான Onion Manchurian ரெடி!

Onion Manchurian
Onion Manchurian

Indo-Chinese உணவுகளின் ரசிகரா நீங்கள்? அப்படியானால் வெங்காயம் பயன்படுத்தி செய்யப்படும் வெங்காய மஞ்சூரியனை நீங்கள் ஒருமுறையாவது முயற்சிக்க வேண்டும். இதை தேவையில்லாமல் கடைகளில் வாங்கி சாப்பிட்டு காசை வீணாக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தியே எளிதாக இதை செய்துவிடலாம். சுவையான வெங்காயமும், சாசும் கலந்த கலவையில் செய்யப்படும் இந்த ரெசிபி, உண்மையிலேயே சூப்பர் சுவையில் இருக்கும். 

மஞ்சூரியன் பந்துகள் செய்ய தேவையான பொருட்கள்: 

 • 2 பெரிய வெங்காயம் 

 • ½ கப் மைதா மாவு 

 • ¼ கப் கான் பிளோர்

 • 2 ஸ்பூன் அரிசி மாவு 

 • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 

 • 1 பச்சை மிளகாய் 

 • ½ ஸ்பூன் மிளகாய்த்தூள் 

 • தேவையான அளவு உப்பு 

 • எண்ணெய் பொரிப்பதற்கு

மஞ்சூரியன் சாசுக்கு தேவையான பொருட்கள்: 

 • 2 ஸ்பூன் எண்ணெய் 

 • 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு 

 • 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி 

 • 1 வெங்காயம் 

 • 1 குடைமிளகாய் 

 • 2 ஸ்பூன் சோயா சாஸ் 

 • 1 ஸ்பூன் தக்காளி சாஸ் 

 • 1 ஸ்பூன் சில்லி சாஸ் 

 • ½ ஸ்பூன் வினிகர் 

 • ½ ஸ்பூன் சர்க்கரை 

 • தேவையான அளவு உப்பு 

 • ¼ கப் தண்ணீர் 

செய்முறை: 

ஒரு பெரிய கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா மாவு, கான்பிளோவர், அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை கெட்டியாக பிசைத்து கொள்ளவும். 

பின்னர் ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்துக் கொள்ளவும். 

அடுத்ததாக தனியாக ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து அவை மென்மையாக வேகும் வரை வதக்குங்கள். 

இதையும் படியுங்கள்:
மொறுமொறு கேரளா ஸ்டைல் சோயா 65 செய்து சாப்பிடுவோமா?
Onion Manchurian

இப்போது சிறிய கிண்ணத்தில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், வினிகர், சர்க்கரை, உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து கலக்கி, குடைமிளகாய் கலவையில் ஊற்றி கிளறவும். இந்த சாஸ் கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். 

அடுத்ததாக பொரித்து வைத்துள்ள வெங்காய உருண்டைகளை சாஸ் கலவையில் சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி கிளறவும். சிறிது நேரம் அப்படியே வேகவிடுங்கள். 

அனைத்தும் சரியான பதத்திற்கு வந்ததும் வெங்காயம் மஞ்சூரியனை பரிமாறும் தட்டுக்கு மாற்றி, குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு அதன் சுவையை ரசிக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com