சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் Golden Recipe!

Diabetes golden recipe in tamil
Diabetes golden recipe in tamil

எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சர்க்கரை நோயை குணப்படுத்த விரும்புகிறீர்களா? இந்த எளிய கோல்டு ரெசிபியை பயன்படுத்தி சர்க்கரை நோய் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, நீரிழிவு இல்லாத வாழ்க்கையைப் பெற முடியும்.

நீங்கள் நீரிழிவு நோயால் அவதிப்படுபவராக இருந்தால், அல்லது உங்களுக்கு நெருங்கியவர்கள் யாராவது நீரிழிவு நோயாளியாக இருந்தால், நிச்சயம் இந்த கோல்டன் ரெசிபி பயனுள்ளதாக இருக்கும். இந்த ரெசிபி செய்வதற்கு உங்களிடம் நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்தூள் மட்டும் இருந்தால் போதும் எளிதாக செய்துவிடலாம்.

கோல்டன் ரெசிபி செய்முறை: 

ஒரு முழு அளவிலான நெல்லிக்காயை எடுத்து அதன் விதையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நெல்லிக்காய் துண்டுகளை 300 மில்லி தண்ணீர் விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அரைத்த நெல்லிக்காயில் இருந்து அதன் சாற்றை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, அதில் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து கலக்கினால், மாயம் செய்யும் கோல்டன் ரெசிபி தயார். 

தினசரி இந்த கோல்டன் ரெசிபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சர்க்கரை நோய் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரும்.

நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் செய்யும் நன்மைகள்:  

  • நீரிழிவு மூலமாக ஏற்படும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

  • மன அழுத்தம் குறைந்து, மனநிலையை மேம்படுத்துகிறது.

  • நீரிழிவால் எரியும் பாதங்களின் விளைவைக் குறைக்கிறது.

  • கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி, இதய தசைகளைப் பாதுகாக்கிறது.

  • நீரிழிவு நோயின் பக்க விளைவுகளான கண் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனைகள், நரம்புக் கோளாறு போன்றவற்றைக குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
Kerala Pachadi: பீட்ரூட் வச்சு இப்படி ஒரு ரெசிபி நீங்க செஞ்சிருக்க மாட்டீங்க! 
Diabetes golden recipe in tamil

இப்படி இந்த கோல்டன் ரெசிபியில் பல நன்மைகள் கிடைத்தாலும், எவ்விதமான இயற்கை மருத்துவ முறையை முயற்சிப்பதற்கு முன்பும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com