சுவையும் மணமும் அள்ளும் வித்யாசமான ரெசிபிகள்..!

health benefits
Different recipes in tamil
Published on

ன்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் புதுமையாக ஏதேனும் செய்து தர மாட்டீர்களா என்ற கேள்வி எப்போதும் வீடுகளில் எழும். அதற்காகவே இதோ இந்த ரெசிபிகள்.

குழந்தைகளுக்கான இலை அடையும், தேங்காய் பால் பிரியாணியும், பீர்க்கங்காய் சாம்பாரும் உண்மையில் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் வாருங்கள் பார்ப்போம்.

இலை அடை

தேவை:
கோதுமை மாவு - 1/2கிலோ
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1 கப் (துருவியது)
வெல்லம் -  தேவையான அளவு
ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்
வாழை இலை - வட்டமாக நறுக்கியது.

செய்முறை:
கோதுமை மாவை சலித்து அதனுடன் சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசையவும். வாணலியில் தேங்காய், பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து நன்றாக கலந்து வரும் வரை வதக்கி இறக்கி வைக்கவும். வட்டமாக நறுக்கிய வாழை இலையில் சப்பாத்திமாவு எடுத்து உருண்டையாக்கி வட்டமாக தட்டி வறுத்த தேங்காய் கலவையை அதில் பரப்பி இலையை ஒரு பாதி மட்டும் மடித்து இட்லி பானையில் வைத்து வேகவைத்து எடுக்கவும். இது ருசியானது மட்டுமல்ல சத்துக்கள் நிறைந்ததும் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. விரும்பி சாப்பிடுவார்கள்.

தேங்காய் பால் பிரியாணி

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கெட்டித்தேங்காய் பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மல்லித்தழை - சிறிது
புதினா-  சிறிது
பட்டை  இலவங்கம் - தலா 3
சோம்பு- சிறிது
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் & நெய் -  4 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா ஸ்டஃப்ட் (Stuffed) சப்பாத்தி!
health benefits

செய்முறை:
அரைமணி முன் பாசுமதி அரிசியைக் கழுவி வடித்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் விட்டுக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், தட்டிய ஏலக்காய், சோம்பு ,பிரிஞ்சி இலை போட்டு வாசம் வந்ததும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் அரைத்தது , கழுவிய புதினா இலை இவற்றைப் போட்டு வதக்கவும். பின் தேங்காய் பால் ஊற்றி அதனுடன் ஒரு கப் நீர், தேவையான உப்பு போட்டு கொதித்ததும் பாதி ஊறிய அரிசியை போட்டு மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய பச்சடி அல்லது உருளை மசாலா ஏற்றதாக இருக்கும். திடீர் விருந்தினருக்கு இதனை செய்து பரிமாறலாம்.

பீர்க்கங்காய் சாம்பார்

தேவை:
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
சீரகம் - 1 ஸ்பூன்
தக்காளி - 2 பெரியது
பூண்டு-  5 பல்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
வரமிளகாய் - 2
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
பீர்க்கங்காய் - 1 கப் நறுக்கியது எண்ணெய் - தாளிக்க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு – தேவைக்கு

இதையும் படியுங்கள்:
சமையல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான எளிய குறிப்புகள்!
health benefits

செய்முறை:
கழுவிய துவரம் பருப்புடன் சீரகம், பூண்டு, பாதி வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள்  சேர்த்து சிறிது நீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேக விடவும். பருப்பு வெந்ததும் எடுத்து ஆறியவுடன் நீரை வடித்து தேங்காய் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.  வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வரமிளகாய் கிள்ளியது, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் பீர்க்கங்காய்களை சேர்த்து நன்கு வதக்கவும் . அரைத்து வைத்துள்ளதையும் வடித்த நீரையும் இதில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து காய் வேகும் வரை நன்கு கொதிக்கவிடவும். இறக்கும் பொழுது கொத்தமல்லி தழை தூவினால்  வித்தியாசமான சுவையான சாம்பார் சூடான சோற்றில் போட்டு சாப்பிட ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com