

துளசி மிக்சர்.
தேவையான பொருட்கள்:
பொரி – 2 கப்
சேவ் / ஓமப்பொடி – 1 கப்
வேர்க்கடலை – ½ கப்
பச்சை பட்டாணி (வறுத்தது) – ½ கப்
துளசி இலை – 1 கைப்பிடி (சுத்தம் செய்து காயவைத்தது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக நறுக்கவும்)
கருவேப்பிலை – 1 கைப்பிடி
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
கடாயில் எண்ணெய் சூடாக்கி, வேர்க்கடலை, பட்டாணி, பச்சை மிளகாய், கருவேப்பிலை அனைத்தையும் வறுத்துக் கொள்ளவும். பின் துளசி இலைகளை எண்ணெயில் சற்று முறுக்கிப் பொறித்துக் கொள்ளவும். பொரி, சேவ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு, மிளகாய் தூள் தூவி மெதுவாக கிளறி இறக்கவும். சுவையான மொறு மொறு துளசி மிக்சர் தயார்.
தில்குஷ் மிக்சர்
தேவை:
பெரிய உருளைக்கிழங்கு - 2, சர்க்கரை - கால் கப், முந்திரிப்பருப்பு -10,
உலர் திராட்சை -10, வேர்க்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை கப்.
செய்முறை:
உருளைக்கிழங்கின் தோலை நீக்கி கழுவிக் கொள்ளவும். பின் ஸ்கிராப்பரில் கிழங்கை பொடியாக துருவிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை 2 துண்டுகளாக ஒடித்துக்கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கவும். வாணலியில் எண்ணெயை சுடவைத்து, காய்ந்த திராட்சை, முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை அதில் சிவக்க வறுத்தெடுக்கவும். பின்னர் அதே எண்ணெயில் துருவிய கிழங்கையும் சிறிது சிறிதாக வெள்ளை நிறமாக மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். அடுப்பை குறைந்த தணலில் வைத்துக்கொள்ளவும். வறுத்தெடுத்த கிழங்கு ஆறியதும் சர்க்கரை, வறுத்த முந்திரி, உலர் திராட்சை, கடலை ஆகியவற்றை கலந்து குலுக்கி எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும். தில்குஷ் மிக்சர் ரெடி.
அவல் மிக்சர்
தேவையானவை:
அவல் - 3 கப்,
வேர்க்கடலை, பொட்டுக் கடலை - தலா அரை கப், முந்திரி, திராட்சை - தலா ஒரு கப்,
கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மாலையில் கொறிக்க உகந்த வித்தியாசமான மிக்சர் இது.