நாவிற்கு சுவையூட்டும் திண்டுக்கல் ஸ்பெஷல் ரெசிபி வகைகள்!

Tasty Dindigul Special recipes
Dindigul Special recipes
Published on

திண்டுக்கல் உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4

கடலைமாவு – 1 கப்

அரிசிமாவு – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

சீரகத்தூள் – ½ டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் _ ½ ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கவும். (அதிக மொறுமொறுப்பாக வேண்டும் என்றால் வேகவைக்காமல் நேரடியாக ஊறவைக்கலாம்.) கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். மிதமான தடிமனாகவும், நெளிவாகவும் மாவு இருக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை காய்ச்சி உருளைக்கிழங்கை மாவில் முக்கி எண்ணெயில் போடவும். மிதமான தீயில் பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். சூடாக சட்னி அல்லது புதினா சாஸுடன் பரிமாறவும்.

சேனைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 250 கிராம்

மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி

கார்ன்ஃப்ளோர் – 1 தேக்கரண்டி

அரிசிமாவு – 1 தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிறுதுளி

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – வறுப்பதற்குத் தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
பீஹாரி ஸ்டைலில் கதல் (Jackfruit) சப்ஜி எப்படி செய்வது என்று பார்ப்போமா?
Tasty Dindigul Special recipes

செய்முறை:

கிழங்கை தோல் நீக்கி கொத்தி வெட்டி, பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். குக்கரில் 2 விசில் வரை நீர் சேர்த்து வேக வைக்கவும். (அதிகமாக வேக வைக்க வேண்டாம்) வெந்த கிழங்கை நீரில் இருந்து எடுத்து வடிகட்டி, துண்டுகளை சிறு ஸ்லைஸ்களாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு, கார்ன் ஃப்ளோர், அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த மாவு கலவையில் வெந்த சேனை துண்டுகளை போட்டு மெதுவாக கலக்கவும். (மாவு சிறிது ஒட்ட வேண்டும்.) கடாயில் எண்ணெய் சூடாக வைத்து, சேனை துண்டுகளை பொன்னிறமாகவும், கிரிஸ்பியாகவும் பொரிக்கவும். இறுதியில் சிறிது மிளகுத்தூள் தூவினால் நல்ல வாசனை கிடைக்கும். இது ஒரு வெறும் ஸ்நாக்ஸாகவும், உணவுடன் சேர்த்து சாப்பிடவும் சிறப்பாக இருக்கும்.

கம்பங்கூழ்

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப் (கம்பு மாவாக அரைத்தது)

நீர் – 3 கப்

பழைய சாதம் – ½ கப் (கூழுடன் கலப்பதற்கு)

உப்பு – தேவையான அளவு

ஓமம் – ½ ஸ்பூன்

மிளகாய், சின்ன வெங்காயம் – சிறிதளவு

இதையும் படியுங்கள்:
ஈஸியா செய்யலாம், ஆரோக்கிய கம்பு வடையும் – இனிப்பு உருண்டையும்!
Tasty Dindigul Special recipes

செய்முறை:

முதலில் கம்பை தண்ணீரில் 6-8 மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி, நன்றாக காயவைத்து, மிருதுவாக அரைத்து மாவாக வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில், சிறிது சிறிதாக கம்பு மாவை சேர்த்து கிளறவும். இடைவிடாது கிளறாமல் இருந்தால் கூழ் கட்டி பிடித்துவிடும். சுமார் 10–15 நிமிடம் வரை குறைந்த தீயில் வேகவிடவும். மாவு வெந்ததும் இறக்கி சிறிது நேரம் கழித்து அதைக் கூழ் பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

குளிர்ந்த பிறகு, அதில் பழைய சாதம் சேர்த்து கலக்கவும். உப்பு சேர்த்து பச்சமிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்துடன் பரிமாறவும். இனிப்பு கம்பங்கூழ் செய்ய, கூழில் உப்பை குறைத்து வெல்லம் சேர்த்து பரிமாறலாம். இது சூடான காலங்களில் உடலை குளிர்விக்க மிகவும் உதவுகிறது. காலை உணவாகவும், இரவு நேரத்திலும் ஆரோக்கியமாக சாப்பிடலாம். இந்த பாரம்பரிய கம்பங்கூழ் உடல் தாகத்தைக் குறைத்து, குளிர்ச்சி தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com