பூசணி அல்வா & மகிழம்பூ முறுக்கு!

ஸ்வீட் காரம் பட்சணம் போட்டி பரிசு பெறும் ரெசிபிக்கள்!
Sweet Karam Batchanam Recipes 27
Sweet Karam Batchanam Recipes 27
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பூசணி அல்வா!

தேவையானவை: துருவிய பரங்கிக்காய் - 1 தம்ளர், ஜுனி - 1 தம்ளர், முந்திரி -50 கி, நெய் – 50 கி, பால் - ½  தம்ளர், குங்குமப்பூ – சிறிது.

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி துருவிய பரங்கிக்காயை வதக்கவும். பிறகு ஜுனியை போட்டு நன்றாக கிளறவும். அதோடு பாலை சேர்த்து நன்றாக கிளறவும். குங்குமப்பூ சேர்க்கவும். திரண்டு வரும்போது இறக்கவும். சுவையான pumpkin halwa  ரெடி!

இதையும் படியுங்கள்:
சத்துமாவு கலகலா & கார வடை!
Sweet Karam Batchanam Recipes 27

மகிழம்பூ முறுக்கு!

தேவையானவை: பச்சரிசி - 4 தம்ளர், பாசிப்பருப்பு - ¾ தம்ளர், உளுத்தம் பருப்பு - ¾   தம்ளர், ரீபைண்ட் ஆயில் - வேக வைப்பதற்கு உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்பு இரண்டையும் சிறிது வறுத்துக்கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் மாவாக அரைத்துக்கொள்ளவும். 2 தம்ளர் மாவு எடுத்து, உப்பு போட்டு தண்ணீர் தெளித்து முறுக்கு அச்சில் மாவை வைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி பிழிந்து எடுக்கவும். சூடான சுவையான  மகிழம்பூ முறுக்கு தயார்!

- ராமாயி ராமநாதன்

logo
Kalki Online
kalkionline.com