
வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற்றால் தான் உடல், உணவையும், நீரையும் ஆற்றலாக மாற்ற முடியும். சுவாசித்தல் உட்பட எல்லா செயல்களும் நன்றாக நடக்கும். வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெற உதவும் அடர் இலைக் கீரைகளையும் காய்கறிகளையும் எப்படி சமைத்து உண்ண வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் அடர் இலைக் கீரைகள் மற்றும் காய்கறிகள்;
முருங்கைக் கீரை, கடுகுக் கீரை, பசலைக் கீரை, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லிக் கீரை போன்ற அடர்த்தியான இலைகளில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் குணாதிசயங்கள் உள்ளன. கேரட், அருகுலா, கடற்பாசி, பச்சை பீன்ஸ், முட்டைக்கோஸ் பிரக்கோலி, காலிஃப்ளவர், குடைமிளகாய் போன்ற காய்கறிகளில் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவும் பண்புகள் உள்ளன.
சமைக்கும் முறை;
அடர் இலைக் கீரைகளையும் காய்கறிகளையும் ஆவியில் வேகவைத்து அல்லது வதக்குதல் போன்ற முறைகளை பயன்படுத்தி சமைப்பது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை தக்கவைத்து சுவையையும் அதிகரிக்கும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் அவற்றை இணைத்து சமைக்கும் போது அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் அதிகரிக்கும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
அடர் இலைக் கீரைகளை அவற்றில் உள்ள விட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அவற்றை ஆவியில் வேக வைக்க வேண்டும். இந்த கீரைகளை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் கழுவி, இட்லிப் பானையில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும்.
பின்பு ஒரு கடாயில், ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சூடாக்கி, நறுக்கப்பட்ட ஐந்து பூண்டுகள் மற்றும் 10 வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பின்பு கீரைகளை சேர்க்க வேண்டும் ஐந்து நிமிடங்களில் அவை வெந்து விடும். கீரைகளில் இருக்கும் இரும்புச்சத்தை மேம்படுத்த அவற்றுடன் வைட்டமின் சி நிறைந்த தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும். மிளகுத்தூள் போட்டு சமைக்க வேண்டும்.
சாலடுகள்;
அருகுலா, கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றை சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கி அவற்றை வண்ணமயமான காய்கறிகள், நறுக்கிய பழங்கள், கொட்டைகள் விதைகள் போன்றற்றுடன் கலந்து சாலடுகளாக சேர்த்து உண்ணலாம்.
சூப்கள்;
காய்கறி சூப்புகளில் அவற்றின் ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க அடர் இலை கீரைகளை நறுக்கி சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்.
ஆம்லெட் மற்றும் தோசை;
லேசாக வதக்கிய முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி, கடுகுக்கீரை போன்றவற்றை ஆம்லெட் மற்றும் தோசையில் கலந்து கொள்ளலாம்.
அடர் இலைக் கீரைகள் மற்றும் காய்கறிகளில் உள்ள சத்துகள்;
அடர் இலைக்கீரைகள் மற்றும் காய்கறிகளில் விட்டமின்கள் ஏ, சி, கே, இரும்பு மெக்னீசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உடலின் பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்கின்றன. அடர்ந்த இலைக் கீரைகளில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கிறது. இது மேம்பட்ட வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
அடர் இலைக் கீரைகளில் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. இவை உடலின் செல்லுலர் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இன்றியமையாதது. உடல் செயல்பாடுகளின் போது உகந்த வளர்ச்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.