உங்க வீட்டு சப்பாத்தி சாஃப்ட் ஆக இருக்கணுமா?

உங்க வீட்டு சப்பாத்தி  சாஃப்ட் ஆக இருக்கணுமா?
Published on

சப்பாத்தி சுடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று சொல்லலாம். ஆனால் இல்லத்தரசிகளுக்கு சாஃப்ட் ஆக இந்த சப்பாத்தியை செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். சில பேர் சப்பாத்தி சுட்டால் வரட்டி போல இருப்பதாக வீட்டினர் நகைச்சுவையாக சொல்வதும் உண்டு.

சப்பாத்தியை சாஃப்டாக அதே சமயம் சுவையாக செய்வதற்கு எளிமையான, சுலபமான பயனுள்ள குறிப்பை பின்பற்றினால் உங்கள் வீட்டு சப்பாத்தி நிச்சயம் சாஃப்ட் ஆக வரும். இனி வீட்டில் மிருதுவான, பஞ்சு போன்ற சப்பாத்திகளை செய்து அசத்தலாம்.

சப்பாத்தி மாவு பிசையும் பொது கொஞ்சம் தயிர் விட்டு பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

சிலர் பால் விட்டு பிசைவதும் உண்டு . அப்போது சப்பாத்தி நிச்சயம் சாஃப்ட் ஆக வரும்.

கோதுமை மாவு அரைக்கும் பொது 200 கிராம் கருப்பு சுண்டல் போடு அரைத்து உபயோகித்தால் சாது நிறைந்ததாக இருக்கும். அதனோடு கனிந்த வாழை பழத்தை போட்டு பிசைந்தாலும் சப்பாத்தி சாஃப்ட் ஆக வரும்.

சப்பாத்தி மாவு பிசையும் முறை:

சப்பாத்தி ரொம்பவும் வறட்சியாக வருவதற்கு முதல் காரணம் சப்பாத்தி மாவில் சரியான அளவு தண்ணீரை ஊற்றி பிசையாததுதான். மாவுக்கு ஏற்ற தண்ணீரை சரியான அளவு ஊற்றி இருக்க வேண்டும். 2 கப் மாவுக்கு, 3/4 கப் தண்ணீர் சரியாகஇருக்கும். சில மாவு கொஞ்சம் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும். சில மாவு தண்ணீரை கொஞ்சம் குறைவாக உறிஞ்சும்.

அதற்கு ஏற்றது போல கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நீங்கள் மாவை பிசைய வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு போட்டு, தேவையானஅளவு உப்பு போட்டு, இதில் 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு போட்டு, முதலில் எல்லாமாவையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு 3/4 கப் அளவு தண்ணீரைஊற்றி, 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மாவை சாஃப்ட்டாக பிசைந்து, அதன்மேலே லேசாக எண்ணெயை தடவி ஒரு மூடி போட்டு, மூடி வைத்து விடுங்கள். மாவு டிரையாக கூடாது. சப்பாத்தி மாவு பிசைந்து வைத்த பிறகு 1 மணி நேரம் ஊறினால்சப்பாத்தி சாஃப்டாக கிடைக்கும். கடலை மாவு சேர்க்கும்போது சப்பாத்தி எப்போதும் செய்வதை விட மிக மிக மிருதுவாக லேயர் லேயராக உப்பி நமக்கு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com