சுவைமிகு காளான் சூப் & காளான் டார்ட்: வீட்டிலேயே எளிதாக செய்யும் முழு ரெசிபி!

காளான் சூப் முதல் காளான் டார்ட் வரை, வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் தரத்தில் செய்யும் எளிய படிப்படியான செய்முறை விளக்கம்.
mushroom-recipe-tamil
mushroom-recipe-tamil
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

காளான் சூப்:

நறுக்கிய காளான் 1/2 கப் 

வெங்காயம் 1

பூண்டு நறுக்கியது 2 ஸ்பூன்

மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் 

உப்பு தேவையானது

வெண்ணெய் 2 ஸ்பூன் 

கார்ன் பிளார் 1 ஸ்பூன் 

பால் 1/4 கப்

பிரஷ் கிரீம் 

கொத்தமல்லி சிறிது

அடுப்பில் வாணலியை வைத்து 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.  நறுக்கிய காளான்களை சேர்த்து மீண்டும் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதித்ததும் சோளமாவை சிறிது பால் கலந்து சேர்த்துக் கிளறவும். சூப் கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு பிரஷ் கிரீம் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

சுவையைக் கூட்ட விரும்பினால் சிறிது காளான் கலவையை மிக்ஸியில் அரைத்து சூப்பில் சேர்க்கலாம். சூடான பிரட் டோஸ்ட்களுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். 

காளான் டார்ட் (Mushroom Tart): 

காளான் 

வெண்ணெய் 

பூண்டு

சின்ன வெங்காயம் 

சீஸ் 

உப்பு 

மிளகு 

ஆலிவ் ஆயில் 

அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் மற்றும் எண்ணெயை சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் காளான்களைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கி பூண்டு, உப்பு சேர்த்து வாசம் வரும்வரை மேலும் ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
ரோட்டுக் கடை பரோட்டா சால்னா & தக்காளி பஜ்ஜி – வீட்டிலேயே செய்வது எப்படி?
mushroom-recipe-tamil

மைதா அல்லது கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மெல்லிய  சப்பாத்தியாக செய்யவும். இதனை லேசாக மாவு தூவிய ட்ரேயில் வைத்து, வதக்கி வைத்துள்ள கலவையை சப்பாத்தியில் சிறிது இடைவெளி விட்டு நிரப்பவும். அதன் மீது சீஸைத் துருவி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சப்பாத்தி ஓரங்களை ஃபில்லிங்கைச் சுற்றி விளிம்புகளை மடித்து சிறிது அழுத்திவிடவும்.

இதனை 425°F வெப்ப நிலையில் 15 நிமிடங்கள் வரை (பொன்னிறமாகும் வரை) வைத்து எடுக்கவும். சிறிது ஆறவிட்டு துண்டுகளாக்கி பரிமாற மிகவும் ருசியான காளான் டார்ட் தயார்.

முக்கிய குறிப்பு:

காளான்கள் பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். இது ஒரு சிறந்த பசியைத் தூண்டும் உணவாக (appetizer) அல்லது மதிய உணவாகப் பரிமாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com