வழக்கமான பாலக் பன்னீர் போர் அடிச்சிருச்சா? அப்போ இந்த புதுமையான ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

இன்று நாம் பாலக்கீரை, பன்னீர் இவை இரண்டையும் வைத்து சூப்பரான 'பாலக் பன்னீர் ரைத்தா' செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
palak paneer raitha| பாலக் பன்னீர்
palak paneer raitha - பாலக் பன்னீர்AI Image
Updated on

பாலக்கீரை (Palak Spinach) வைட்டமின்கள் A, C, K, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்த ஒரு ஊட்டச்சத்து மிகுந்த கீரையாகும். இது ரத்த சோகையைத் தடுக்கவும், கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. அதாவது இதில் இயற்கையாகவே உள்ள ஃபோலிக் ஆசிட் (Folic Acid) கருவின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைச் சீராகக் கொண்டு செல்ல உதவுகிறது.

பன்னீர் (Paneer) - புரதம் நிறைந்த, கால்சியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது தசைகளை வலுப்படுத்தவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புரத உணவாகும்.

பாலக்கீரை, பன்னீர் இவை இரண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை இரண்டையும் வைத்து எப்பவுமே பாலக் பன்னீர், பன்னீர் குருமா, பாலக் புலாவ்னு செஞ்சவங்க ஒரு இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

இன்று நாம் பாலக்கீரை, பன்னீர் இவை இரண்டையும் வைத்து செய்யப்போகும் ரெசிபி மிகவும் சுவையானது. இதை செய்வதும் மிகவும் எளிது. இதனை சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, புல்காவுடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். பேச்சிலர்கள் விரைவாகவும், சுலபமாகவும், அதே சமயம் ஆரோக்கியமான இந்த பாலக் பன்னீர் ரைத்தாவை 30 நிமிடடத்தில் செய்து ருசிக்கலாம். வாங்க இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாலக்கீரை - 2 கைப்பிடி

பன்னீர் - 200 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பூண்டு - 10 பல்

சீரகம் - அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன் + அரை டீஸ்பூன்

தனியா தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாலக் பன்னீர்
palak paneer raithaAI Image

பன்னீரை துண்டுகளாக நறுக்கி மிக்சிஜாரில் போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் அதில் அரைத்து வைத்து தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!
palak paneer raitha| பாலக் பன்னீர்

தக்காளி நன்றாக விழுது நன்றாக வதங்கியதும் அதில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து வதக்கிய பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.

அடுத்து கீரை நன்றாக வெந்ததும் அதில் அரைத்து வைத்து பன்னீர் பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பை 2 நிமிடம் மிதமான தீயில் வைத்த பின்னர் அணைத்து விடவும்.

இதையும் படியுங்கள்:
மொறு மொறு பாலக்கீரை பக்கோடி மற்றும் வாழைப்பூ வடை ரெசிபி!
palak paneer raitha| பாலக் பன்னீர்

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பூண்டு நன்றாக பொரிந்ததும் அதை பாலக் பன்னீரில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி எடுத்தீங்க அப்படின்னா சூப்பரான டேஸ்டியான பாலக் பன்னீர் ரைத்தா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com