வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் இட்லி மஞ்சூரியன்!

இட்லி மஞ்சூரியன்
இட்லி மஞ்சூரியன்Image credit - youtube.com

வீட்டில் இட்லி செய்யும் போதெல்லாம் கண்டிப்பாக மிச்சமாகும். தோசையை விரும்பி சாப்பிடுவது போல ஆரோக்கியம் நிறைந்த இட்லியை யாரும் கண்டுக்கொள்வதில்லை. அப்படி மிச்சமாகும் இட்லியை இனி இட்லி மஞ்சூரியனாக செய்து கொடுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட போட்டி போடுவார்கள். சரி வாங்க, இட்லி மஞ்சூரியனை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

இட்லி-5.

கோதுமை மாவு-2 தேக்கரண்டி.

அரிசி மாவு- 2 தேக்கரண்டி.

சோளமாவு-2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி

மிளகு தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

சோயா சாஸ்-1/2 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

நறுக்கிய பூண்டு-1/2 தேக்கரண்டி.

நறுக்கிய இஞ்சி-1 துண்டு.

நறுக்கிய பச்சை மிளகாய்-1

சிறிதாக நறுக்கிய வெங்காயம்-1.

சிறிதாக நறுக்கிய கேப்ஸிகம்-1.

டொமேட்டோ சாஸ்-1 தேக்கரண்டி.

சில்லி சாஸ்-1 தேக்கரண்டி.

சோயா சாஸ்-1 தேக்கரண்டி.

தண்ணீரில் கரைத்த சோள மாவு 1 தேக்கரண்டி.

ஸ்பிரிங் ஆனியன்- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் 5 இட்லியை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்பு ஒரு பவுலில் கோதுமை மாவு 2 தேக்கரண்டி, அரிசி மாவு 2 தேக்கரண்டி, சோள மாவு 2 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, மிளகு தூள் ½ தேக்கரண்டி, சோயா சாஸ் ½ தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி நன்றாக பஜ்ஜி பதத்திற்கு கின்டவும்.

இப்போது சின்னதாக வெட்டி வைத்திருக்கும் இட்லியை அதில் சேர்த்து பிரட்டி பஜ்ஜி போடுவது போல எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?
இட்லி மஞ்சூரியன்

இப்போது ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் ½ தேக்கரண்டி சிறிதாக நறுக்கிய பூண்டு, சிறிதாக வெட்டிய இஞ்சி 1 துண்டு, சிறிதாக வெட்டிய மிளகாய் 1, வெங்காயம் 1 சின்னதாக வெட்டியதை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அத்துடன் சிறிதாக நறுக்கிய கேப்ஸிகம் 1, டோமேட்டோ சாஸ் 1 தேக்கரண்டி, சில்லி சாஸ் 1 தேக்கரண்டி, சோயா சாஸ் 1 தேக்கரண்டி, தண்ணீரில் 1 தேக்கரண்டி சோள மாவைக் கரைத்து ஊற்றவும். பிறகு இத்துடன் பொரித்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்றாக கின்டி அதன் மேலே வெட்டி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி இறக்கவும். இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் தயார். டேஸ்ட் சும்மா அல்டிமேட்டா இருக்கும். நீங்களும் வீட்டிலே செஞ்சி பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com