சுலபமாக செய்யலாம் மோத்திசூர் லட்டுவும்- கலக்கலான காளான் போண்டாவும்!

மோத்திசூர் லட்டு
மோத்திசூர் லட்டு

மோத்திசூர் லட்டு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 125 கிராம்

ஆரஞ்சு கலர் கேசரி பவுடர் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

வெள்ளைச் சர்க்கரை - 250கிராம்

நெய் - 2ஸ்பூன்

ஏலக்காய் தூள் - 1ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10

செய்முறை:

முதலில் ஒரு பவுலில் கடலை மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஆரஞ்சு கலர் கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சிறிய துளையுள்ள கரண்டியை பயன்படுத்தி மாவு கரைசலை பூந்தியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, மிதமான தீயில் பாகுவை வைத்து அதில் பூந்தி, நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். மிதமான சூட்டில் லட்டு பிடித்துப் பரிமாறவும். சுவையான மோத்திசூர் லட்டு தயார்.

புழுங்கல் அரிசி ரிப்பன் பகோடா

தேவையான பொருட்கள்:

புழுங்கள் அரிசி - 2 ஆழாக்கு

மிளகாய் வற்றல் -  25

 பூண்டு பல் - 25

பெருங்காயம் - சிறிதளவு 

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

கடலை மாவு  - 1/4 கிலோ 

வறுத்தவெள்ளை எள் -  1 தேக்கரண்டி,

வெண்ணெய் - 100 கிராம்,

பொரிக்க - கடலைஎண்ணெய் - தேவையான அளவு 

 ரிப்பன் பகோடா
ரிப்பன் பகோடா

செய்முறை:  

புழுங்கல் அரிசியை  ஊறவைத்து நன்றாக களைந்து மிக்ஸியில் போட்டு,  அதனுடன் மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம், சோம்பு, உப்பு ஆகியவை போட்டு இட்லி மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து, அதனுடன்  கடலை மாவு, எள், வெண்ணெய் , பெருங்காயம் சேர்த்துப் பிசையவும் . வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை பகோடா அச்சில் போட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
செடிகள் பேசுவது உண்மை என்றால் நம்புவீர்களா?
மோத்திசூர் லட்டு

காளான் போண்டா

தேவையான பொருட்கள்:

காளான் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 3

இஞ்சி - சிறிதளவு 

பச்சைமிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு 

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு 

பச்சைப்பட்டாணி -50 கிராம்

அரிசி மாவு - 1 கப் 

கடலைமாவு - 2 கப்

உப்பு -தேவையான அளவு

மிளகு பொடி - 1/2 ஸ்பூன் 

சுக்கு பொடி - 1 ஸ்பூன் 

சமையல் சோடா - ஒரு சிட்டிகை. 

கடலை எண்ணெய் - பொரித்தெடுக்க

காளான் போண்டா
காளான் போண்டா

செய்முறை: 

காளானை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். உருளைக் கிழங்கை நன்றாக வேகவைத்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், ப. மிளகாயை வதக்கவும்.

அரிசி மாவு, கடலைமாவு, உப்பு, மிளகுப் பொடி,  இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, சுக்குப்பொடி, சமையல் சோடா, மசித்த உருளைக்கிழங்கு. பச்சைப் பட்டாணி, வெந்த காளான் சேர்த்து நன்றாகக் கலந்து, உருண்டையாக உருட்டி  எண்ணெயில் பொரித் தெடுக்கவும். சுவையாள காளான். போண்டா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com