
இன்றைக்கு அட்டகாசமான ஆந்திரா ஸ்பெஷல் புலகம் மற்றும் வேர்க்கடலை சட்னி ரெசிபியை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
புலகம் செய்ய தேவையான பொருட்கள்.
பச்சரிசி-1 கப்.
பாசிப்பருப்பு- ½ கப்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
நெய்-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
முந்திரி-20.
காய்ந்த மிளகாய்-10
பச்சை மிளகாய்-4
கருவேப்பிலை, கொத்தமல்லி-1 கைப்பிடி.
இஞ்சி-1 துண்டு.
பூண்டு-4
உப்பு-1 தேக்கரண்டி.
தண்ணீர்-3 ½ கப்.
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
புலகம் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் பச்சரிசி, ½ கப் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கழுவிய பிறகு 30 நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். குக்கரில் 1 தேக்கரண்டி எண்ணெய், 1 தேக்கரண்டி நெய் சேர்த்து விட்டு 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இப்போது 20 முந்திரி, 10 காய்ந்த மிளகாய், 4 பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு 4, இஞ்சி 1 துண்டு இவை அனைத்தையும் நன்றாக பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இத்துடன் ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது ஊற வைத்திருக்கும் அரிசி பருப்பை இத்துடன் சேர்த்துக் கொண்டு உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இத்துடன் 3 ½ கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கினால் ஆந்திர ஸ்பெஷல் புலகம் தயார்.
நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்.
வேர்க்கடலை-150 கிராம்.
தனியா- 2 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
குண்டு மிளகாய்-3
நீட்டு மிளகாய்-2
பூண்டு-6
சின்ன வெங்காயம்-4
புளி-எழுமிச்சை அளவு.
கல் உப்பு-1/2 தேக்கரண்டி.
வேர்க்கடலை சட்னி செய்முறை விளக்கம்.
முதலில் 150 கிராம் வேர்க்கடலையை கடாயில் நன்றாக வறுத்துவிட்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் 2 தேக்கரண்டி தனியா, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடலைப்பருப்பை சேர்த்து வறுத்து அதையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 3 குண்டு மிளகாய், 2 நீட்டு மிளகாய், புளி ஒரு எழுமிச்சை அளவு, 6 பூண்டு, சின்ன வெங்காயம் 4 ஆகியவற்ற வதக்கி அதையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது இவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கல் உப்பு ½ தேக்கரண்டி தண்ணீர் சிறிது விட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.