முட்டை இல்லாத Brownie, செய்ய கொஞ்சம் கவனி! 

Eggless Brownie Recipe
Eggless Brownie Recipe

சுவையான பிரவுனியை சாப்பிடுவது என்பது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த உணவில் முட்டை சேர்க்கப்படுவதால், பெரும்பாலான சைவ விரும்பிகள் இதன் சுவையை அறிவதில்லை. ஆனால் இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம், ஏனெனில் முட்டை சேர்க்காமலும் சுவையான பிரவுனி செய்யலாம். சரி வாருங்கள் அது எப்படி என இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு 

  • 1 கப் சர்க்கரை

  • ½ கப் இனிப்பு இல்லாத கோகோத்தூள் 

  • ½ ஸ்பூன் பேக்கிங் பவுடர் 

  • ¼  ஸ்பூன் உப்பு 

  • ½ கப் எண்ணெய் 

  • 1 கப் பால்

  • 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் 

  • ½ கப் சாக்லேட் சிப்ஸ்

  • சிறிதளவு நட்ஸ்

செய்முறை: 

சரியான பதத்தில் பிரவுனி செய்வதற்கு மைக்ரோவேவ் ஓவன் முக்கியம். முதலில் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் அளவுக்கு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கோக்கோ பவுடர், சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 

அடுத்ததாக அந்தக் கலவையில் எண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கட்டிகள் இல்லாத அளவுக்கு கலக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் சாக்லேட் சிப்ஸ் மற்றும் நறுக்கிய நட்ஸ்களை மாவில் சேர்த்துக் கொள்ளலாம். இது பிரவுனிக்கு கூடுதல் சுவை மற்றும் அமைப்பைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
Video உள்ளே: அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட அனகோண்டா!
Eggless Brownie Recipe

அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு அந்தக் கிண்ணத்தை எடுத்து அப்படியே மைக்ரோவேவ் ஓவனில் இரண்டு நிமிடங்கள் வரை அதிக வெப்பத்தில் வேக விடுங்கள். உங்களுடைய மைக்ரோவேவ் ஓவனின் வாட்டேஜை பொருத்து சமையல் நேரம் மாறுபடலாம் எனவே வெளியே இருந்து உன்னிப்பாக கவனிக்கவும். 

இறுதியாக பிரவுனி வெந்ததும், மைக்ரோவேவ் ஓவனில் இருந்து பாதுகாப்பாக வெளியே எடுத்து, சில நிமிடங்கள் குளிர விடுங்கள். பின்னர் அதை அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து, நீங்கள் விருப்பப்பட்டால் நட்ஸ், கிரீம், சாக்லேட் சாஸ் போன்றவற்றை மேலே தடவி அப்படியே சுவைத்து சாப்பிடலாம். இதன் சுவை உண்மையிலேயே வேற லெவலில் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com