முட்டை இல்லாமலே பிரௌனி செய்யலாமே! 

Eggless Brownie
Eggless Brownie
Published on

பிரௌனி என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு வகை. இதை சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ சாப்பிடலாம். பிரௌனியை செய்ய முட்டை அவசியம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.‌ ஆனால், முட்டை இல்லாமல் பிரௌனி செய்ய முடியும். அதுவும் அதன் சுவை மாறாமல் சூப்பராக செய்யலாம். இந்தப் பதிவில், அனைவரும் விரும்பும் பிரௌனியை முட்டை இல்லாமல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

பிரௌனி செய்யத் தேவையான பொருட்கள்:

  • 1 கப் அரைத்த கோதுமை மாவு

  • 1 கப் சர்க்கரை

  • 1/2 கப் கோகோ பவுடர்

  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

  • 1/4 டீஸ்பூன் உப்பு

  • 1/2 கப் எண்ணெய்

  • 1/2 கப் பால்

  • 1 டீஸ்பூன் வென்னிலா எசென்ஸ்

  • 1/2 கப் சாக்லேட் சிப்ஸ்

  • சிறிதளவு நட்ஸ்

செய்முறை:

பிரௌனி தயாரிப்பதற்கு மைக்ரோவேவ் அவன் இருப்பது நல்லது. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர், அதில் எண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கி ஒரு மென்மையான கலவையைத் தயாரிக்கவும். 

இந்தக் கலவையில் நீங்கள் விருப்பப்பட்டால் சாக்லேட் சிப்ஸ் மற்றும் நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம். இப்போது, இந்த கலவையை பிரௌனி பேன் அல்லது சதுர வடிவ பாத்திரத்தில் ஊற்றி, மைக்ரோவேவ் அவனில் வைத்து 25 நிமிடங்கள் வேக வைத்தால், சூப்பரான சுவையில் முட்டை இல்லாத பிரௌனி தயார். 

இதையும் படியுங்கள்:
சுவையான வேர்க்கடலை சாதம் வித் முருங்கைப்பூ முட்டை பொரியல் ரெசிபிஸ்!
Eggless Brownie

முட்டை இல்லாமல் செய்யும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். முட்டையின் பங்கை பால் ஈடு செய்கிறது. பால் பிரௌனிக்கு ஈரப்பதத்தை அளித்து மிருதுவாக மாற்றுகிறது. பேக்கிங் பவுடர் பிரவுனியை மென்மையாக மாற்றுகிறது. வெண்ணிலா எசன்ஸ் இதற்கு நல்ல வாசனை மற்றும் சுவையை அளிக்கிறது. எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்த கலவையை நன்கு கலக்க வேண்டும். இல்லையேல் பிரௌனி சரியாக வராது. 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பிரௌனியை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com