ஈரோடு சமையல்: இளநீர் இட்லி முதல் ஜாமுன் சட்னி வரை... ஈரோட்டின் விசேஷ உணவுகள்!

Erode Samayal
ஈரோடு சமையல் | Erode Samayal
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

ஈரோடு ஒரு செழிப்பான உணவு கலாச்சாரத்தை கொண்டுள்ள பரபரப்பான நகரமாகும். தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஈரோடு, மலைகள் மற்றும் இயற்கை அழகுக்காக பெயர் பெற்ற நகரமாகும். ஜவுளி உற்பத்தி மையமாக இருக்கும் இந்த நகரம் உணவுப் பிரியர்களின் சொர்க்கமாகவும் திகழ்கிறது.

ஈரோடு சமையலில் என்ன சிறப்பு?

ஈரோடு சமையலின் சிறப்பு என்பது கொங்கு மண்டலத்தின் எளிமை, சுவை மற்றும் பாரம்பரிய உணவுகளுக்கும் பெயர் பெற்றது. கம்பு, திணை, சாமை போன்ற தானியங்கள், காய்கறிகள், மிளகாய், வெல்லம், அதிகமாக விளையும் மஞ்சள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சமைக்கும் உணவு வகைகள் பிரபலமானவை. தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் வளமான உணவு வகைகள் கிடைக்கின்றன. பலவகையான மசாலா பொருட்களை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. தேங்காய் மற்றும் ரோஸ் வாட்டர் இப்பகுதியின் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானவை.

பெரும்பாலான ஈரோடு உணவுகள் மிகவும் லேசானது என்றாலும் அவற்றில் மசாலா பொருட்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக 'மஞ்சள்' அவர்கள் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஈரோடு சமையலில் பிரபலமான உணவுகள்:

ஈரோடு சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு பிரபலமானது. ஊத்தப்பம், தோசை, இட்லி, சாம்பார், ரசம், இடியாப்பம் போன்றவை ஈரோட்டில் மிகவும் பிரபலமான உணவுகள். வட இந்தியாவின் பிரபலமான உணவான பரோட்டா ஈரோட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஈரோடு தமிழ்நாட்டின் வணிக மையங்களில் ஒன்றாக இருப்பதால், பல இடங்களில் இருந்தும் இங்கு பலதரப்பட்ட மக்கள் வருவதால் சர்வதேச உணவுகளும், பானி பூரி, டோக்ளா, சாட் அயிட்டங்கள் என பலவகையான துரித உணவுகளும் கிடைக்கின்றன.

கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் ஈரோட்டின் சமையல் கொங்கு உணவு வகைகளை ஒத்ததாக இருக்கும். இதில் பருப்பு, அரிசி மற்றும் காய்கறிகளை மையமாகக் கொண்ட எளிமையான மற்றும் காரமான உணவுகள் அடங்கும்.

அசைவ உணவு பிரியர்களுக்கு ஈரோடு பள்ளிபாளையம் கோழியும், கிள்ளுக்கறி எனப்படும் தனித்துவமான மட்டன் சார்ந்த குழம்பும் பிரபலமாகும்.

ஈரோடு சமையலை எங்கே கற்றுக் கொள்வது?

ஈரோடு சமையலை கற்க பல வழிகள் உள்ளன. ஈரோடு நகரத்தில் உள்ள சமையல் வகுப்புகள், உள்ளூர் சமையல்காரர்களிடம் கற்றுக் கொள்வது, ஆன்லைன் சமையல் வகுப்புகள், சமையல் குறிப்புகள் அடங்கிய வலைதளங்கள், YouTube சேனல்கள் மற்றும் சமையல் சமூக ஊடக பக்கங்களை பயன்படுத்தலாம்.

Helpers Near Me போன்ற தளங்களில் ஈரோட்டில் உள்ள சமையல்காரர்களைத் தேடி, கட்டணத்தின் அடிப்படையில் சமையலை கற்றுக் கொள்ளலாம்.

ஈரோடு மக்களிடம் பேசியும், சமையல் குறிப்புகளை பெற்றும் அவர்களின் பாரம்பரிய சுவையான சமையல் குறிப்புகளை கற்றுக் கொள்ளலாம்.

பிரபலமான ஈரோடு சமையல் சமையல் குறிப்புகள்:

1) இளநீர் இட்லி:

பச்சரிசி - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

இளநீர் - 2 கப்

சர்க்கரை - 2 ஸ்பூன்

உப்பு - தேவையானது

எண்ணெய் - சிறிது

பச்சரிசி, உளுந்து, வெந்தயத்தை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உப்பு, தண்ணீருக்கு பதில் இளநீர் சேர்த்து அரைக்கவும். ஆறு மணி நேரம் கழித்து இட்லி தட்டுகளில் சிறிது எண்ணெய் தடவி மாவை விட்டு பத்து நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். ஈரோடு ஸ்பெஷல் சுவையான இளநீர் இட்லி தயார்.

இதையும் படியுங்கள்:
உலகம் முழுவதும் பிரபலமான டாப் 10 இந்திய உணவுகள்!
Erode Samayal

2) ஜாமூன் சட்னி:

நாவல் பழங்கள் - 1 கப்

சின்ன வெங்காயம் - 1/4 கப்

உப்பு - தேவையானது

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய் - 3

தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை

ஜாமுன் பழங்களை கழுவி கொட்டைகளை எடுத்து விடவும். வாணலியில் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அத்துடன் கொட்டை நீக்கிய ஜாமுன்கள், புளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து எடுக்கவும். இனிப்பு, புளிப்பு, காரம் நிறைந்த இந்த ஜாமுன் சட்னி இட்லி, தோசை சாதத்துடன் பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சத்தான கோதுமை ரவை ரெசிபிகள்… பல வகையான உணவுப் பயணங்கள்!
Erode Samayal

3) பொரிச்ச கூட்டு:

காய்கறி, பருப்பு, தேங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த கூட்டு சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்றது

பூசணிக்காய் பீன்ஸ் கேரட் போன்ற பிடித்த ஏதாவது ஒரு காய்கறியுடன் துவரம் பருப்பை வேகவைத்து சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, தேங்காய் சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து கொதிக்க விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்ட ருசியான பொரிச்ச கூட்டு தயார்.