

மூன்று பச்சைமிளகாய், ஒரு துண்டு பெருங்காயம், அரை ஸ்பூன் கல்உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து, பொடியாக நறுக்கிய மாங்காய்த்துண்டுகளோடு நன்றாக பிசிறி வைக்கவும். பின்னர் கடுகு தாளித்து ஊறுகாய் செய்தால் சுவையில் அசத்தும்.
எலுமிச்சையிலிருந்து சாறு எடுக்கும் முன் அதனை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தால் சாறு அதிகமாக கிடைக்கும்.
பாலில் தயாரிக்கும் உணவுகளுடன் பழச்சாற்றை சேர்க்க வேண்டுமானால் பாலைத் துளித்துளியாக சேர்த்தால் பால் திரியாமல் இருப்பதோடு ருசியும் கூடும்.
ரொட்டி மீந்துவிட்டால் அதை உதிர்த்து வெயிலில் காய வைத்துக்கொள்ளுங்கள். கட்லெட் செய்யும்போது பயன் படுத்தினால் கட்லெட் சுவை மிகுந்து இருக்கும்.
துவரம்பருப்புடன் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து வேகவைத்து, மசித்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பாரின் ருசியே அலாதிதான்.
ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சமஅளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து நெய் விட்டுக்கிளறினால் வித்தியாசமான சுவையுடன் சர்க்கரை பொங்கல் தயார்.
எலுமிச்சையிலிருந்து சாறை எடுக்கும்முன் அதனை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தால் சாறு அதிகமாக வரும்.
சாண்ட்விச் செய்யும்போது பிரட் ஓரங்களை தூக்கி எறிந்துவிட வேண்டாம். அவற்றை சின்னச் சின்னதாக வெட்டி நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை சூப்பில் சேர்க்கலாம்.
எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை தட்டில் போடும் முன் வடிகட்டி அல்லது உறிஞ்சுத்தாளில் வைக்கவும்.
தேங்காய் உடைத்த நீர் சேர்த்து,கோதுமை மாவைப் பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்கள். மிகவும் ருசியாக இருக்கும்.
பக்கோடா செய்யும்போது முழுவதும் கடலைமாவில் செய்யாமல் நாலில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால் பக்கோடாவின் சுவையே அலாதிதான்.
எலுமிச்சை ஊறுகாய் செய்யப்போறீங்களா? அதனுடன் வதக்கிய இஞ்சித்துண்டுகள் சிறிதளவு சேர்த்துக் கிளறினால் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.