அவசரத்திற்கு உதவும் எளிய மிளகாய் ஊறுகாய் செய்முறை!

pickles recipe
Chilli pickle...
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவை:

பச்சை மிளகாய் ½ கிலோ

சுத்தம் செய்த கெட்டிப் புளிக் கரைசல் ½ கப்,

கடுகு 25 கிராம்,

வெந்தயம் 25 கிராம்,

கருப்பு எள் 50 கிராம்,

மஞ்சள் தூள் 1டீஸ்பூன்,

எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,

கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாணலியை சூடாக்கி, எள், கடுகு, வெந்தயம் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்(dry roast). ஆறியதும், மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பவுடராக்கவும்.

பின் மிளகாயை காம்பை கிள்ளிவிட்டு ஒரு இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாயைப் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்புப் போடவும். கொதி வந்ததும் மசாலா பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து ஒன்று சேர கலந்துவிடவும். இரண்டு நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.

இதையும் படியுங்கள்:
போண்டா முதல் மசியல் வரை: சுவையான பசலைக்கீரை சமையல்!
pickles recipe

ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு மூடவும். தயிர் சாதத்துக்கு அருமையான காம்பினேஷன்

இப்போது பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி இது மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் இதை ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடலாம்.

-ஜெயகாந்தி மகாதேவன்

logo
Kalki Online
kalkionline.com