
1. சேமியா பக்கோடா :
தேவையான பொருட்கள்
வறுத்த சேமியா -ஒரு கப்
வெங்காயம் - இரண்டு (நறுக்கியது)
வேக வைத்த உருளைக்கிழங்கு - ரெண்டு
இஞ்சி -ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு -முக்கால் கப்
அரிசி மாவு - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லி, புதினா இலை -சிறிது
முந்திரிப்பருப்பு பாதியாக உடைத்தது -ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கு
செய்முறை
வறுத்த சேமியாவில் சுடுதண்ணீர் விட்டு முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு அதில் குளிர்ந்த நீரை சேமியாவில் ஊற்றி திரும்ப வடி கட்டவும்.
பின் அதனுடன் பிசைந்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, நறுக்கிய மல்லி, புதினா இலை மற்றும் பொடித்த முந்திரி, உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
2. பிரட் பக்கோடா :
தேவையான பொருட்கள் :
பிரட் - 4
பிரட் தூள் - கால் கப்
அரிசி மாவு -ஒரு ஸ்பூன்
கடலை மாவு - ஒரு ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி -ஒரு துண்டு
பச்சை மிளகாய் -ஒன்று
பூண்டு பொடியாக நறுக்கியது-ஒரு ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - -தேவையானது
செய்முறை :
பிரட்டை சிறிது தண்ணீரில் போட்டு உதிர்த்து அதோடு பிரட் தூள் இஞ்சி, பூண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம் நறுக்கியது, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு அதனுடன் லேசாக தண்ணீர் விட்டு பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பிசைந்த மாவை உதிர்த்துப் போட்டு பொரித்து எடுத்தால் ருசியான பிரட் பக்கோடா ரெடி.
சுலபமாக செய்து அசத்தலாம் குடும்பத்தினரை.