பரீட்சை பயம் வேண்டாம்! ஞாபக சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரிக்க அம்மாவின் 'சீக்ரெட்' ரெசிபிகள்!

Don't be afraid of exams!
Don't be afraid of exams!
Published on

தோ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகிவிட்டது. பிள்ளைகள் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது அம்மாக்களின் கடமை.

அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக்கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்கவேண்டும். அம்மாவின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் கண்டிப்பாக சோர்வடைய மாட்டார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு சத்தான உணவுவகைகளும் தேவை.

சில சத்தான உணவுகள்:

ஆரஞ்சு தோல் மற்றும் விதையை எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக்கி அதனுடன் குளுக்கோஸ், சிறிது சர்க்கரை, எலுமிச்சை ஜூஸ் சேர்ந்து சாப்பிட கொடுக்கலாம். தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு கால்சியம் சத்து இதன் மூலம் கிடைக்கும்.

ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு போட்டு வேகவைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். வேகவைத்த ராஜ்மா, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு ,அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது ஓமப்பொட, எலுமிச்சை ஜூஸ் விட்டு சாப்பிட கொடுக்கலாம். இது இரவில் வெகு நேரம் படிக்கும் பிள்ளைகளுக்கு உதவும். சுறுசுறுப்பை தரக்கூடியது.

மாதுளம் பழத்தை தோல் உரித்து உதிர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து கொடுக்கவும். ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால் வரும் உடல் உஷ்ணம் இதன் மூலம் தணியும்.

அகலமான பாத்திரத்தில் பிரஷ் கிரீமுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய ஆப்பிள், பைனாப்பிள் துண்டுகள், கொய்யா, திராட்சை, அக்ரூட் பருப்பு சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் பிரிட்ஜில் வைத்திருந்து கொடுக்கவும். இது உடனடியாக சோர்வை நீக்கி மூளை சுறுசுறுப்பு பெற உதவும்.

வெந்த துவரம் பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வெந்தயக்கீரை சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கொதித்த பின் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நெய் விட்டு வெந்தயக் கீரை கூட்டைப் பிசைந்து சாப்பிட இரும்புச்சத்து கால்சியம் விட்டமின் ஏ சத்துக்கள் உடலில் சேரும்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் நளபாகம்: கோடை ஸ்பெஷல் மாங்காய் சாதம் மற்றும் கசப்பில்லா பாகற்காய் சாதம்!
Don't be afraid of exams!

கேரட்டை மிக்ஸியில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது நீர்சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து சூடாகவோ, குளிர வைத்தோ கொடுக்கலாம். விட்டமின் இ, கால்சியம் நிறைந்த மில்க் ஷேக் இது. மூளைக்கு செல்லும் ரத்தத்தை இது அதிகரிக்கும். பாடத்தில் நன்கு கவனம் செலுத்தவும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் இந்த கேரட் மில்க் ஷேக் துணை செய்யும்.

ஒரு கப் கோதுமை மாவுடன், கால் கப் துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய் இஞ்சி விழுது அரை டீஸ்பூன், சீரகத்தூள் கால் டீஸ்பூன், தேவையான உப்பு ,சேர்த்து பிசறி வெதுவெதுப்பான நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் சுட்டெடுக்கவும். (நெய் விட்டு சுடவும்) வித்தியாசமான இந்த சப்பாத்தி பிள்ளைகளுக்கு நிரம்ப பிடிக்கும்.

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், நான்கு காய்ந்த மிளகாய் அரை டேபிள்ஸ்பூன் உளுந்து பெருங்காயம் கால் டீஸ்பூன் சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை அளவு புளி, தேவையான உப்பு, கால் கப் உதிர்த்த கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சிறிது நீர் விட்டு பச்சை வாசம் போக குழம்பாக கொதிக்க விட்டு கடுகு தாளிக்கவும். இதை இட்லி தோசைக்கு தொட்டுகொள்ள கொடுக்கலாம். இந்த கறிவேப்பிலை குழம்பு மூளை திறனையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
கேஸ் சிலிண்டர் இல்லையா? கவலை வேண்டாம்! அடுப்பில்லாமல் சமைக்க இதோ 14 சூப்பர் ஐடியாக்கள்!
Don't be afraid of exams!

ஒரு கப் ஸ்வீட் கார்னை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ‌இரண்டு டீஸ்பூன் சோள மாவுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வானலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (தலா 50 கிராம்)வெங்காயம்' பூண்டு 6 பல் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும் இவைகள் மூழ்குமாறு நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்கும் போது சிறிதளவு உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும். காய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி கிளறி இறக்கி வேகவைத்த ஸ்வீட் கார்னை மேலே தூவி பிள்ளைகளுக்கு கொடுக்கவும். இந்த வெஜ் அண்ட் ஸ்வீட் கார்ன் சூப் மனதில் ஏற்படும் பதற்றத்தை போக்கி சுறுசுறுப்பு பெறஉதவும்.

இப்படி விதவிதமாய் வித்தியாசமாய் சத்தானதாய் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க பிள்ளைகள் முதல் மதிப்பெண் வாங்குவது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com