Expiry Date தெரியும், அது என்ன Shelf Life?

Expiry Date Vs Shelf Life
Expiry Date Vs Shelf Life
Published on

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றின் மீது பயன்படுத்தும் தேதி (Expiry Date) மற்றும் சேமிப்பு காலம் (Shelf Life) என்னும் இரண்டு சொற்கள் பொதுவாகக் காணப்படும். இவை இரண்டும் ஒரே அர்த்தத்தை குறிக்கும்படி இருந்தாலும், இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு பலருக்குத் தெரியாது.‌ இந்தப் பதிவில் இவ்விரு சொற்களின் அர்த்தங்கள் மற்றும் அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

பயன்படுத்தும் தேதி (Expiry Date): இது ஒரு பொருளை எத்தனை ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம், என உற்பத்தியாளர் நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட தேதியாகும். இந்த தேதி வரை அல்லது அதற்குப் பிறகு அந்த குறிப்பிட்ட பொருளை உபயோகிப்பது பாதுகாப்பானதாக இருக்காது. உணவுப் பொருட்களில் இந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அவற்றின் சுவை, மணம், ஊட்டச்சத்து மதிப்பு குறையலாம் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. 

சேமிப்பு காலம் (Shelf Life): இது ஒரு பொருளை அதன் இயல்பான தரத்தை இழக்காமல் பாதுகாக்க சேமித்து வைக்கக்கூடிய கால அளவு ஆகும். இந்த கால அளவு பொருட்களின் வகை, உற்பத்தி முறை, சேமிப்பு நிலை போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து மாறுபடும். சில பொருட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பது அவசியமாக இருக்கும். மற்ற சில பொருட்களை அறை வெப்ப நிலையில் சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கும்.‌ பால் போன்ற பொருட்களுக்கு சில வாரங்கள் Expiry Date இருந்தாலும், அதன் Shelf Life ஒரு நாள் மட்டுமே. பால் பாக்கெட்டை வெட்டிவிட்டால், அதில் இருக்கும் பாலை ஒரு நாளில் பயன்படுத்திவிட வேண்டும். 

பயன்படுத்தும் தேதி என்பது ஒரு பொருளை பயன்படுத்தாமல் அதிகபட்சம் எவ்வளவு காலம் வரை சேமிக்கலாம் என்பதை குறிக்கிறது. சேமிப்பு காலம் என்பது, ஒரு பொருளைப் பயன்படுத்த தொடங்கியதும் எத்தனை காலத்திற்குள் அதை பயன்படுத்திவிட வேண்டும் என்பதைக் கூறும் காலக்கெடு. எனவே, எந்த ஒரு பொருளையும் அதன் எக்ஸ்பைரி டேட்டை வைத்து நீங்கள் நீண்ட காலம் பயன்படுத்தலாம் என நினைக்காதீர்கள். அந்தப் பொருளின் ஷெல்ஃப் லைஃப் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்த முற்படுங்கள். 

இதையும் படியுங்கள்:
புரூனில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
Expiry Date Vs Shelf Life

இந்த இரண்டின் உண்மையான அர்த்தங்களை நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இது நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, உணவு மற்றும் பிற பொருட்கள் வீணாவதையும் தடுக்க உதவும்.‌ எனவே, எந்த ஒரு பொருளை வாங்கும் போதும், அவற்றின் மீது இருக்கும் தேதிகளை கவனமாக படித்து, அவற்றை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com