
சாமை சர்க்கரை பொங்கல்!
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 50 கிராம்
வெல்லம் - 1/4 கிலோ
முந்திரி - 8
திராட்சை - 8
நெய் - தேவைக்கேற்ப
பால் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
சாமை அரிசி, பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும். வாணலியில் நெய்விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.
6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, வறுத்த பாசிப்பருப்பை முதலில் போட்டு அரை பதம் வெந்ததும், பின்னர், சாமை அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.
பிறகு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சத்தான சாமை சர்க்கரை பொங்கல் ரெடி.
சாம்பார் பொடி
மிளகாய் வற்றல் - 1/2 kg
தனியா - 1/2 kg
துவரம் பருப்பு -300 gm
கடலை பருப்பு - 200 gm
மிளகு - 50 gm
வெந்தயம் - 25 gm
வரளி மஞ்சள் - 2 numbers
செய்முறை:
எல்லாவற்றையும் நன்றாக காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்தெடுக்க மணமான சாம்பார் பொடி ரெடி.
தக்காளி புளிக்குழம்பு
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
2 டீஸ்பூன் - மல்லித்தூள்
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிய பிறகு தக்காளியை வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். புளியை கரைத்து ஊற்றி நன்றாக கொதித்ததும் தேங்காயை அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி, கடுகு வெந்தயம் பெருங்காயம் தாளித்து போட்டு இறக்கவும்.