
எனர்ஜி ட்ரிங்க்:
ஓட்ஸ் 1/2 கப்
கோதுமை மாவு 1/4 கப்
பொட்டுக்கடலை 1/4 கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
பாதாம், பிஸ்தா, வால்நட்,
முந்திரிப்பருப்பு 1 கப்
ஏலக்காய் 4
சர்க்கரை 1 கப்
பால் தேவையானது
கோதுமை மாவையும் ஓட்ஸையும் தனித் தனியாக வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பயத்தம் பருப்பையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
பொட்டுக்கடலையை சூடு வர வறுத்தெடுத்தால் போதும். உலர் பழங்களான பாதாம் பிஸ்தா வால்நட் முந்திரிப் பருப்பு, ஏலக்காய் ஆகியவற்றையும் வெறும் வாணலியில் சூடு வர வறுக்கவும். சிறிது சூடு ஆறியதும் வறுத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து பொடிக்கவும். எனர்ஜி பவுடர் தயார்.
இதனை காற்று புகாத டப்பாவில் வைத்துக் கொண்டு தினம் ஒரு கப் பாலுக்கு ஒரு ஸ்பூன் எனர்ஜி பவுடரை சேர்த்து கொதிக்க விட்டு பிள்ளைகளுக்கு கொடுக்க சோர்வை போக்கி புத்துணர்ச்சியை தரும்.
கறிவேப்பிலைப் பொடி மினி இட்லி:
மினி இட்லி 10
கறிவேப்பிலை பொடி 2 ஸ்பூன் நல்லெண்ணெய் (அ) நெய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை பொடி:
கறிவேப்பிலை 1 கப்
மிளகு 1/2 ஸ்பூன்
மிளகாய் 1
கடலைப்பருப்பு 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் பெருங்காயம் சிறிது
உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்
எக்ஸாம் சமயத்தில் பிள்ளைகளுக்கு டென்ஷன் காரணமாக பசியே தெரியாது. நாம்தான் பார்த்து பார்த்து அவர்களுக்கு சத்தான உணவை கொடுக்க வேண்டும்.
வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், மிளகு, பெருங்காய கட்டி சிறிது சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். பிறகு ஆய்ந்த கறிவேப்பிலையை சேர்த்து சூடு வர வறுத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து எடுக்க கறிவேப்பிலை பொடி தயார்.
வாணலியில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு கடுகு பொரிந்ததும் மினி இட்லி கடை போட்டு அதன் மேல் தேவையான அளவு கருவேப்பிலை பொடியை தூவி கிளறி இறக்கவும். சுவையான பொடி மினி இட்லி தயார்.
மல்டி க்ரெயின் பிரெட் சாண்ட்விச்:
மல்டி க்ரெயின் பிரட் 4 ஸ்லைஸ் தக்காளி 1
வெங்காயம் 1
பன்னீர் உதிர்த்தது சிறிது
உப்பு தேவையானது
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
வாணலியில் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். அத்துடன் உதிர்த்த பன்னீரையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து கலந்து இரண்டு பிரெட்களுக்கு இடையே வைத்து ரோஸ்ட் செய்து பிள்ளைகளுக்கு தர உணவு ஹெவியா இல்லாமல் லைட்டாக இருப்பதால் தூக்கம் வராமல் நன்கு படிக்கவும், சோர்வை போக்கவும் உதவும்.