உப்பின் சுவையோடு ஒரு சிங்கிள் 'நூன் சாய்' - அருந்துவோமா?

Noon chai
Noon chai
Published on

தேனீர் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான விருப்பமான ஒன்று. காஷ்மீரில் தேனீரில் உப்பு சேர்த்து குடிப்பார்களாம். இதை 'நூன் சாய்' (chai) என்று கூறுகிறார்கள். இதை ஷியர் சாய் என்றும் கூறுவதுண்டு. இந்த தேனீர் பிங்க் நிறத்தில் உப்புச் சுவையுடன் இருக்கும்.

நூன் சாய் என்றால் என்ன ?

நூன் தேனீர் என்பது க்ரீன் டீ இலைகள், பால், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து தயாரிப்பது. இது ஒரு பிங்க் கலரைக் கொடுக்கும். இது மிக வாசனையாக இருக்கும். பாரம்பரிய காஷ்மீர் மக்களுக்கு இது மிக முக்கியமானது, விருப்பமானது. காலை ப்ரேக் ஃபாஸ்ட்டில் பிரெட் மற்றும் குல்சாவுடன் சாப்பிடுவார்கள். மாலையிலும் இதை உட்கொள்வார்கள்.

இதன் தனித்தன்மை:

இனிப்பான தேனீராக இல்லாமல் உப்பின் சுவையோடு தயாரிக்க படுவதே இதன் தனித்தன்மையாகும். இந்த தேனீர் தயாரிக்கும் போது பேக்கிங் சோடா சேர்ப்பதால் க்ரீன் டீயுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு பிங்க் நிறமாகிறது. சிலசமயம் இதில் குங்குமப்பூ, க்ரீம் மற்றும் நட்ஸ் வகைகளும் சேர்க்கப் படுகின்றன. குளிர் காலத்தில் இப்படித் தயாரிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வரப்போகும் கோடைகாலத்தை சிரமமில்லாமல் சமாளிக்க...
Noon chai

நூன் தேனீரின் ஆரோக்கிய நன்மைகள்:

இது ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்தது‌. இதில் உள்ள க்ரீன் டீயிலும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் ஃப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடுகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் பேக்கிங் சோடா செரிமானத்தை சீராக்குவதுடன் குடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இதை உட்கொள்வதால் உடல் சிறந்த நீரேற்றத்துடன் விளங்குகிறது. இதில் உப்பு சேர்க்கப்படுவதால் எலக்ட்ரோலைட் சரியாக பாலன்ஸ் செய்யப்படுகிறது. குளிர் காலத்திற்கு மிகச் சிறந்தது. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும்.

நூன் சாய் எப்படி தயாரிப்பது?

தேவையானவை:

தண்ணீர் - 2கப்

ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகள்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

பால் - அரை கப்

உப்பு - கால்டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

பாதாம் பொடித்தது - ஒரு டீஸ்பூன்.

இதையும் படியுங்கள்:
இன்று தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளின் அட்டவணை முழுவிவரம்
Noon chai

செய்முறை:

தண்ணீரை கொதிக்க வைத்து க்ரீன் தேயிலை சேர்க்கவும். இதில் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். கலர் சிறிது சிறிதாக மாறும். பத்து நிமிடம் நல்ல வாசனை வரும் வரை கொதிக்க விடவும். பிறகு பால் உப்பு ஏலப்பொடி சேத்து வடிகட்டி குடிக்கவும்.

டீ என்றால் அது இனிப்பாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், உப்புச் சுவை கொண்ட இந்த நூன் டீ என்ற பாரம்பரியம் மிக்க தேனீரும் சுவையாகவே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com