ஐந்து நிமிடத்தில் ரெடியாகும் மொறுமொறு டீ டைம் ஸ்நாக்ஸ்: எளிய செய்முறை விளக்கம்!

Easy snacks in Tamil - மொறுமொறு ஸ்நாக்ஸ்
Easy snacks in Tamil - மொறுமொறு ஸ்நாக்ஸ்AI Image
Updated on

வ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் தேநீருடன் ஸ்நாக்ஸ் அருந்துவது மிகவும் இனிய அனுபவமாக இருக்கிறது. சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டே குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது அனுபவத்தை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த நேரத்தில் இனிப்பு, காரம் என பலவிதமான சுவைகளில் இருக்கும் ஸ்நாக்ஸ்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் மாலை நேர தேநீருக்கு ஏற்ற மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ் வகைகளை இப்பதிவில் காண்போம்.

மொறுமொறுப்பான மசாலா வேர்க்கடலை

வேர்க்கடலையை லேசாக வறுத்துக்கொண்டு அதனுடன் கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் கலந்த கலவையால் எண்ணெயில் பக்குவமாக பொரித்தெடுக்கப்படும் மசாலா வேர்க்கடலை தேநீருக்கு ஏற்ற மிகவும்  சுவையான ஜோடியாகும். மிகவும் சுவையான மசாலா வேர்க்கடலை வீட்டிலேயே தயாரிப்பதால் பல நாட்களுக்கு சேமித்து வைக்கவும் சிறந்ததாகும்.

கிளாசிகல் சமோசா

மசாலா உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பருப்பு வகைகளால் பக்குவமாக முக்கோண வடிவில் நிரப்பப்பட்ட சமோசா எந்த நேரத்தில் தேநீர் சாப்பிட்டாலும் பொருந்தக்கூடிய ஸ்நாக்ஸ் ஆக உள்ளது. பொன்னிறமாக சுவையான உள்ளடக்கத்துடன் மொறு மொறுப்பாக தயாரிக்கப்படும் சமோசாக்களை புதினா சட்னி ,புளி சட்னி உடன் சேர்த்து சாப்பிட சுவை நாவை விட்டு அகலாது.

ஆரோக்கியமான காக்கரா

எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ்களுக்கு மாற்றாக கோதுமை மாவு, வெந்தய இலைகள், எள் போன்ற மசாலா பொருட்களால் தயாரிக்கப்படும் காக்கரா பலவிதமான சுவைகளில் கிடைப்பதால் மாலை ஸ்நாக்ஸ்க்கு ஏற்றதாக உள்ளது. மெல்லிய மொறு மொறுப்பான பிளாட்பிரட்டான இது கச்சிதமாக சுடப்படுவதால் தயிர் டிப்களுடன் சேர்ந்து சாப்பிட சுவை அலாதியாக இருக்கும். மாலை நேர தேநீருக்கு துணையான ஸ்னாக்ஸாக இது இருக்கிறது.

பாரம்பரியமான பக்கோடா

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கீரை போன்ற காய்கறிகளுடன் கடலை மாவு கலந்து பொரித் தெடுக்கப்படும் பக்கோடா குறைவான எண்ணெய் எடுத்துக் கொள்வதால் மாலை நேர சூடான தேநீருக்கு ஏற்ற திருப்தியான ஸ்நாக்ஸாக உள்ளது. அதுவும் மழைக்காலத்தில் மாலை நேர தேநீருக்கு இதை விட சிறந்த துணை வேறு எதுவும் இல்லை என்ற அளவிற்கு மிகவும் சுவையாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

குறைந்த பொருட்களில் நாவூறும் சுவையில் செய்யும் மொறுமொறு ஸ்நாக்ஸ்:

மாலை நேர தேநீருக்கு  பிஸ்கட்டுகள் மொறு மொறுப்பாக இருப்பதால் மிகவும் சுவையான துணையாக உள்ளன. பட்டர் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள் என பிஸ்கட்டுகளில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு பிஸ்கட்டும் தனித்தன்மையை கொண்டு இருப்பதால் தேநீரின் மென்மையான சுவையை மறைக்காமல் அனைத்து வகை பிஸ்கட்டுகளும் கச்சிதமாக பொருந்துகின்றன.

கருப்பு தேநீர், கிரீன் தேநீர் ,மூலிகை தேநீர் என அனைத்து வகை தேநீருக்கும் அனைத்து வகை பிஸ்கட்டுகளும் சாலப் பொருத்தமுடையது என்பது குறிப்பிடப்பட்டது.

அவசரக்கால வாழ்க்கைச் சூழலில் சமையலறையில் மணிக்கணக்கில் நின்று சமைக்கும் நேரத்தை பாதியாகக் குறைத்து, எஞ்சிய ஓய்வு நேரத்தைக் குடும்பத்தினருடன் தரமாகக் கழிக்கவும், அதே நேரத்தில் சுவையில் எந்த சமரசமும் இல்லாத மொறுமொறு பலகாரங்களை நொடியில் பரிமாறவும் வழிவகுக்கும்.

logo
Kalki Online
kalkionline.com