கேக்குகளில் பூ வேலைகள்

Cake
Cake
Published on

கேக்குகளில் பூவேலைப்பாடுகள் செய்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது தெரியுமா?

ஐசிங் முறைகளில் மூன்று வகைகள் இருக்கின்றன. ராயல் ஐசிங், வாட்டர் ஐசிங், பட்டர் ஐசிங். 

ஐசிங் செய்வதற்கு ஐசிங்  சர்க்கரை மிக மிக மிருதுவாகவும் வெண்மையாகவும் இருக்க வேண்டும்.

ஐசிங் செய்வதற்கு தேவையான அச்சுக்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். நட்சத்திர அச்சு,  பூ அச்சு,  கிளிஞ்சல் அச்சு, எழுத்து அச்சு, இப்படி பல அச்சுகள் உள்ளன.

பட்டர் ஐசிங்கும் வாட்டர் ஐசிங்கும் செய்வதற்கு வெகு சுலபமாக இருக்கும். ராயல் ஐசிங் சற்று கடினமானது.

பூவேலை செய்வதற்கு ஐசிங் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பூக்கள் கலையாமல் உருகாமல் கெட்டியாக இருக்கும்.

பூ வேலைகளை கேக்கின் மீது செய்யும் முன்பு அதற்கான பட்டையான ஒரு கத்தியால் கேக்கின் மேலும் பக்கவாட்டுகளிலும் ஐசிங் கலவையை தடவ வேண்டும்.

முதலில் வெண்ணைத்தாளாலான பையை தயாரித்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்பாகம் கூர்மையாக இருக்க வேண்டும். பிறகு இந்த கூர்மையான அடி பாகத்தை சுமார் ஒரு சென்டிமீட்டர் வெட்டிவிட்டு அதனுள் ஐசிங் பூ அச்சை போட வேண்டும்.

அச்சு அரை சென்டிமீட்டர் வெளியில் தெரிய வேண்டும். இப்போது பையினுள் ஐசிங் கலவையை கொட்டி பையை கைகளால் அழுத்திப் பிழிந்தால் பூக்களாக ஐசிங் கேக்குகளின் மீது படியும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான சாக்கோ வாழைப்பழ கேக் - நெய் கேக் செய்யலாம் வாங்க!
Cake

ஐசிங்கை அடுப்பில் வைத்து இளஞ்சூட்டில் இறக்கி விட வேண்டுமே தவிர கொதிக்க விடக்கூடாது. கொதிக்க விட்டால் ஐசிங்கின் பளபளப்பு குறைந்து விடும்

ஐசிங்கில் தண்ணீரை அதிகமாக கலந்து விடக்கூடாது. அதிகமாக தண்ணீரை கலந்தால், ஐசிங் கலவை கேக்கின் மேல் ஒட்டாது.

தண்ணீரின் அளவு தேவையை விட குறைவாகவும் இருக்கக்கூடாது. குறைவாக இருந்தால் ஐசிங் கேக்கின் மேல் முழுவதுமாக பரவாமல் கொட்டியிடத்திலேயே இறுகிவிடும்.

ஐசிங் முறையில் கத்தியை பயன்படுத்தும் போது அதனை அடிக்கடி இளஞ்சூடான  நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். பூ வேலை செய்யும்போது இந்த கலவை சற்று விறைப்பாக இருக்க வேண்டும்.

ஐசிங்க் இல்லாமலும் கேக்குகளை அழகு படுத்த முடியும் எப்படி என தெரியுமா? பூ வேலைப்பாடு துளையுள்ள சிறு பிளாஸ்டிக் தட்டுகளை கொண்டு கேக்குகளை அழகுபடுத்தலாம்.

பிளாஸ்டிக் தட்டை கேக்கின் மேல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஐசிங் சர்க்கரையை அதன் மேல் சரித்து விட்டு பிறகு பிளாஸ்டிக் வட்டத்தை எடுத்து விட வேண்டும். இப்போது கேக் பூ வேலைப்பாடுகளுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ரோஸ்மில்க் கேக் - தேங்காய் கேக் செய்யலாமா?
Cake

கேக்குகளை எடுத்து அவற்றின் மேல் ஜாமை தடவி அதன்மேல் உடைந்த அக்ரூட் பருப்புகளையும் செர்ரி பழ துண்டுகளையும் வரிசையாக மாற்றி மாற்றி அடுக்கினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

வட்டமான கேக்குதலில் விளிம்புகளில் பப்பர்மின்ட் எனப்படும் வண்ண சிறுமிட்டாய்களை அடுக்கி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு கொண்டும் கேக்குகளை அழகுப்படுத்தலாம். பருப்புகளை கொண்டு கேக்குகளை அழகு படுத்துவதால் கேக்குகளின் புற அழகு கூடுவதோடு ருசியும் சத்தும் கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com