
கிழங்குகளை உணவாகப் பயன்படுத்துவதற்குரியன, மருந்தாகப் பயன்படுத்துவதற்குரியன என இரு வகைப்படுத்தலாம். உணவே மருந்து மருந்தே உணவு என்பதால் உணவாகப் பயன்படுத்தி வரும் கிழங்குகளும் மருத்துவ பலன் அளிப்பவை.
குமிழின் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழக்கு, தாமரைக் கிழங்கு, சேமந்தண்டுக் கிழங்கு, நீலாம்பல் கிழங்கு, செங்கழுநீர் கிழங்கு, கலப்பை கிழங்கு, நிலப் பனங்கிழங்கு, கோவைக் கிழங்கு, பூலாங் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவை மருத்துவ பயன் மிக்கவை. கிழங்குகளில் பொதுவாக மாவுச்சத்து அதிகம் உள்ளதால் அவற்றின் சுவை இனிப்பாக இருக்கும். இதனால்தான் நீரிழிவு நோயாளிகள் அதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
தண்ணீர் விட்டான் கிழங்கு, நிலப் பனங்கிழங்கு, அமுக்காரா கிழங்கு போன்றவை உடலை உறுதியாக்கும் தன்மை கொண்டது. விந்துவை பெருக்க பயன்படும், தண்ணீர் விட்டான் கிழங்கு தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும். குமிழின் கிழங்கு உடலுக்கு பலத்தை தருவதுடன் சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. தாமரை கிழங்கு பித்தத்தை போக்கும் எனினும் எளிதில் செரிக்காது . கூழைக் கிழங்கு மாவு வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. கலப்பை கிழங்கு மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது எனினும் புற்றுநோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது.
ஆகாச கருடன் கிழங்கு, உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவை உணவாகப் பயன்படுத்துவதற்குரியன. கருணைக் கிழங்கு "கந்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு நறுமணம் என்று பொருள். கருணைக் கிழங்கில் காட்டுக் கருணை, நாட்டுக் கருணை, கிறார் கருணை என பல வகைகள் உண்டு. கருணைக் கிழங்கின் இலைகள் அகன்று குடை போலிருக்கும். இவ்விலைகள் பழுப்படைந்து உதிர்ந்ததும் செடியின் கீழ் உள்ள கிழங்கினை மண்ணிலிருந்து பறித்த எடுத்துப் பயன்படுத்துவர்.
கருணைக் கிழங்கை உணவாகப் சாப்பிட நாவிலும் தொண்டையிலும் ஒரு வித நமைச்சல், அரிப்பு தோன்றும். இது உடலிலுள்ள கொழுப்பு சத்தினை குறைக்கும் தன்மை கொண்டது. கருணைக் கிழங்கை சாப்பிடும் போது மோர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருணைக் கிழங்கு பசியை உண்டாக்கும், உண்ட உணவை செரிக்க செய்யும். கருணைக் கிழங்குடன் முள்ளங்கியைச் சேர்த்து சமைத்து உண்ண உடலுக்கு உறுதி உண்டாகும் என்கிறார் தேரையர்.
மக்களின் உணவுப் பழக்கத்தில் கிழங்குகள் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளது. கிழங்குகள் அதிக அளவில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் கொண்டது. கிழங்குகள் பூமியின் அடியில் விளைவதால் அதன் வேரில் அதிக சத்துக்கள் சேமித்து வைக்கும்.
கதிர் கோல் வடிவ கிழங்குகள் மத்தியில் பருத்தும் இரு முனைகளிலும் சிறுத்தும் காணப்படும் உதாரணம் - முள்ளங்கி. நேபிஃபார்ம் வகை மேல் பகுதி பருத்தும் அடிப்பகுதி குறுகி நீண்டு மெலிந்தும் காணப்படும். இதற்கு உதாரணமாக பீட்ரூட் சொல்லலாம்.
கேரட், பீட்ரூட் இரண்டையுமே சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க கூடாது.. இந்த இரண்டிலுமே கிளைசெமிக் குறியீடு இருந்தாலும், கிளைசெமிக் லோடு இதில் மிகவும் குறைவாகவே உள்ளது.. எனவே, அடிக்கடி சமையலில் சேர்த்து இந்த கிழங்குகளை எடுத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனை தரக்கூடியது முள்ளங்கி கிழங்குகள். முள்ளங்கியின் கீரையும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இந்த கீரையலிருந்து சாறு எடுத்து, வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை 2 வேளையும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகுமாம். அந்தவகையில் சிறுநீரகம் சீராக செயல்பட பேருதவி புரிகிறது.
மற்ற கிழங்குகளை அதிகமாக சாப்பிடவும் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.. அதுவும் எண்ணெய்யில் வறுக்காமல், பொரிக்காமல், மிதமான அளவில் குழம்பு, கூட்டு, பொரியலாக சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே!