.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
வீட்டிலிருக்கும் குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்து இருப்பார்கள். அவர்களது உடல் நலம், மனநலம் காக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். மூளையை ஆரோக்யமாக வைத்திருக்க, சில எளிய உணவு வகைகளை ரெகுலராக கொடுத்து வர அவர்களின் படிப்பு, வளர்ச்சி, செயல்திறன் மேம்படும்.
கவனத்தை ஒருமுகப்படுத்த
முழுப் பயறு வகைகள், கைக்குத்தல் அரிசி, கோதுமை,ராகி,சோளம், பருப்பு, உ. கிழங்கு போன்றவை. வெஜிடபிள் சாண்ட்விச், ஃப்ரெஷ்ஷாக பழங்கள் போன்றவையும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.
மகிழ்ச்சியான மனநிலைக்கு
பழங்கள், காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் பி6,ஆகியவை நிறைந்துள்ளன. மூளையிலுள்ள செல்கள் பாதிக்காதவாறு இந்த ஊட்டச்சத்துக்கள்தான் பாதுகாக்கின்றன. வைட்டமின்களையும், தாதுக்களையும் அவை வாரி வழங்குகின்றன.
ஆரோக்யமான நரம்பு மண்டலத்துக்கு
முட்டை, ஆல்மண்ட், வால்நட் போன்ற பருப்புகள் மீன், எள், பரங்கி விதை, முழு கோதுமை போன்ற உணவுகள்.
சிந்திக்கும் சக்தி அதிகரிக்க
தானியங்கள், பருப்புகள், முளைக்கட்டிய பருப்பு வகைகள், பால் பொருட்கள் ஈஸ்ட், கீரைகள்.
தண்ணீர் தேவை
தண்ணீர் போதுமான அளவு அருந்துகிறார்களா என கவனிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிகமான சர்க்கரை, பேக்கிங் உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கொடுத்து மூளையை, உடலை மந்தமாக்கும். இவற்றை தவிர்த்து வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், தேன் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வைட்டமின் சி அதிகம் சேர்க்க வேண்டும். வாழைப்பழம், வைட்டமின் பி6 ,நிறைந்திருப்பதால் படிக்கும் ஆர்வத்தை தூண்டும். உடலை, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
உலர் பருப்புகள், தானியங்கள் ஃபேட்டி ஆசிட், புரதம் அதிகம் கொண்டவை.இவை மூளைச் செல்களை பாதுகாத்து, ஊட்டத்தைக் கொடுக்கும்.
நல்ல தூக்கம், உடற்பயிற்சி, தியானம் பயிற்சியைத் கற்றுக் கொடுக்க மனம் ஒருமுகப்படுத்துவதுடன் அவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள், நொறுக்குத் தீனி போன்றவற்றை கொடுக்காமல் பழக்கிட அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.
நான் வெஜ் உணவுகளை வீட்டிலேயே சமைத்து கொடுக்க அதன் நன்மைகள் முழுவதுமாக கிடைக்கும்.
இவ்வாறு உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.