ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு ஈசியா செய்யலாம் ஆனியன் சமோசாவும் சட்னி சாண்ட்விச்சும்!

samosa - sandwich
samosa - sandwich Image credit - youtube.com
Published on

பிள்ளைகள் பள்ளி விட்டு வந்தாலே பசி பசி என்று அலறுவார்கள். அவர்களுக்கு தரும் ஸ்நாக்ஸ்  சத்தானதாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் ருசியாகவும் இருக்கவேண்டும். என்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொள்ளும் நிலைதான் பெரும்பாலானவர்களுக்கு. ரெகுலராக கடைகளில் வாங்கி தருபவர்கள் நிறைய பேர். ஆனால் வீட்டிலேயே வெகு சிம்பிளாக நாம் செய்தால் ஆரோக்கியமான ஒரு தின்பண்டமாக குழந்தைகளுக்கு அமையும். வாங்க ஆனியன் சமோசாவும் பிரட் சாண்ட்விச்சும் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

 ஆனியன் சமோசா

தேவை:
மைதா அல்லது கோதுமை -ஒரு கப் பெரிய வெங்காயம்- 4
பச்சை மிளகாய் -3, மிளகாய்த்தூள் -அரை டீஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிது உருளைக்கிழங்கு - 2 மசித்தது
உப்பு -தேவைக்கு, எண்ணெய்- பொரிக்க


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமையை சலித்துப் போட்டு தேவையான நீரூற்றி சிட்டிகை சர்க்கரை தேவையான உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். உடன் ஒரு ஸ்பூன் எண்ணெயும் விடலாம். இரண்டு டீஸ்பூன் மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் தயாரித்து தனியே வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் உங்கள் பணியில் சிறக்கவேண்டுமா? அப்போ இது உங்களுக்குத்தான்!
samosa - sandwich

பிசைந்த மாவை சிறிய உருண்டையாக்கி மெலிதாக சப்பாத்தி போட்டு குறுக்கே இரண்டாக வெட்டி  பொட்டலம் போல் செய்து கலந்து வைத்திருக்கும் மெலியதாக நறுக்கிய வெங்காயம் , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள்,கொத்தமல்லி தலை மற்றும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு கலவையை அதில் வைத்து விளிம்புகளை பிரியாதது போல் மைதா மாவு பசையொட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு தொட்டுக் கொள்ள சாஸ் அல்லது ஏதேனும் ஒரு சட்னி வகை இருந்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றாலும் மொறு மொறுப்பாக இருக்கும் இதை சும்மாவே அப்படியே சாப்பிடலாம்.

சட்னி சாண்ட்விச்
தேவை:

பிரட் - 4
பெரிய வெங்காயம்-2
உருளைக்கிழங்கு - 1
பெங்களூர் தக்காளி -1
வெள்ளரிக்காய் - 1
கொத்தமல்லி புதினா சட்னி - 2 ஸ்பூன்.

செய்முறை:

ஸ்லைஸ் ரொட்டியை நான்கு ஓரங்களிலும் வெட்டி நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினா கொத்து மல்லியுடன் (ஒரு மிளகாய் தேவைப்பட்டால்) உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பிரெட் துண்டின் மேல் சட்னி தடவி அதன் மேல் வட்டமாகவும் மெலியதாகவும் நறுக்கிய வெங்காயம் , தக்காளி மற்றும் வேக வைத்து வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கை வைத்து இன்னொரு பிரட் துண்டில் சட்னி தடவி நடுவில் டூத் குத்தி பிள்ளைகளுக்குத் தரவும். சீஸ், குடைமிளகாய், கேரட், மிளகுத்தூள் போன்றவைகள் உங்கள் சாய்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com