

பச்சை பயறு வெஜ்டபிள் கட்லெட்
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு 1 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கேரட் 1 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1 கப்
கொத்தமல்லி தழை சிறிது
கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவையான அளவு
அரிசி மாவு ½ கப்
அரைக்க:
சோம்பு ஒரு டீஸ்பூன்
கசகசா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
சீரகம் ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 4 No
செய்முறை:
முதலில் பச்சைப் பயிறை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் சுற்றி பிறகு
ஊறவைத்த பச்சைப் பயிறைசேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை போட்டு வெங்காயம், மற்றும் காய்கறிகளைப் போட்டு கிளறி பின் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின் இந்த கலவையை கொஞ்சம் எடுத்து உருண்டைகளாக உருட்டி கட்லெட்களாக தட்டிக் வைத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டில் ரொட்டித்தூள் பரப்பி அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்களை பிரட்டிவிடவும்
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் பிரட்டிய கட்லெட்களை வைத்து எண்ணெய் விட்டு நன்கு பொரிய விட்டு எடுக்கவும்.
பச்சைப் பயறு கீரை உருண்டைக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு 1 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கீரை 2 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1 கப்
கொத்தமல்லி தழை சிறிது
மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் 4 No
அரிசி மாவு ½ கப்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
மசாலா அரைக்க:
சின்ன வெங்காயம் 1 கப்
பூண்டு 10 பல்
தக்காளி 2 No
வரமிளகாய் 5 No
கறிவேப்பிலை சிறிதளவு
சோம்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ½ கப்
தாளிக்க:
பட்டை 2 No.
கடுகு உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சைப் பயிறை தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் சோம்பு சேர்த்து அரைத்து பிறகு ஊறவைத்த பச்சைப் பயிறைசேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம் கீரை உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
பின் அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு அரிசி மாவு பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக நன்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை நன்கு எண்ணெயில் வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து உப்பை போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
இறுதியாக குழம்பு எண்ணெய் பிரிந்து வரும்போது பொரித்து வைத்துள்ள பச்சைப்பயறு கீரை உருண்டைகளைப் போட்டு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இந்த பச்சை பயறு கீரை உருண்டையை பொரித்து தனியாக சட்னியுடனும் சாப்பிடலாம்.