
பொட்டுக்கடலை பாயசம்
தேவை:
பொட்டுக்கடலை - அரை கப்
பசும்பால் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
பொட்டுக்கடலையை துளி நெய்யில் வறுத்து, பொடித்து பாலில் கரைத்து, சர்க்கரை கலந்து, கொதிக்க வைக்கவும். இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால், சுவையான, சத்தான பொட்டுக்கடலை பாயசம் தயார்.
*******
பொட்டுக்கடலை வடை
தேவை:
பொட்டுக்கடலை - 2 கப்
பச்சை மிளகாய் - 4
கசகசா - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 6
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் பொட்டுக்கடலையை வறுத்து கரகரப்பாக பொடிக்கவும். கசகசா, முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல், உப்பு இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். பொட்டுக்கடலை பொடி, அரைத்த விழுது, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை எல்லாவற்றையும் கலந்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் காய்ந்த எண்ணெயில் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப்போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். கர கர மொறு மொறு பொட்டுக்கடலை வடை ரெடி.
********
பொட்டுக்கடலை லட்டு
தேவை:
தேன் - 3 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 6
வெள்ளத்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
பொட்டுக்கடலையை நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். அதனுடன் தேன், தேங்காய்த் துருவல், வெல்லத்தூள், பேரிச்சம்பழம் கலந்து லட்டுகளாகப் பிடிக்கவும். சுலபமாக செய்யக்கூடிய, சத்தான லட்டு இது.
*******
பொட்டுக்கடலை பக்கோடா
தேவை;
பொட்டுக்கடலை - 2 கப்
பச்சரிசி மாவு - அரை கப் வரமிளகாய் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பொட்டுக்கடலை, வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு, வெங்காயம், உப்பு கலந்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து உதித்தாற்போல் போட்டு வாணலியில் எண்ணெய் விட்டு, பொரித்து எடுத்தால், சுவையான, பொட்டுக்கடலை பக்கோடா தயார்.