எளிமையான மருத்துவத்துடன் கூடிய சமையல் குறிப்புகள்!
கனத்த உடம்பு, குண்டாக இருக்கிறவர்கள் கவலைப்படாமல் அடிக்கடி பார்லி கஞ்சி செய்து சாப்பிட்டு வர நன்றாக உடல்நிலை சீராகும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி பனங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை உண்டு வந்தாலும் உடல் இளைக்கும்
முள்ளங்கி வாழைத்தண்டை நறுக்கி ,எலுமிச்சைசாறு உப்பு சேர்த்து காலையில் குடித்து வர உடம்பில் இருக்கிற கெட்ட நீர் வெளியேறுவதுடன் ஊளை சதையும் குறையும்.
பிரண்டையை நார்நீக்கி உப்பு, காரம் ,மிளகாய் , புளி, உளுந்து கலந்து நன்றாக வதக்கி அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தமகலும், ஊளைசதையும் குறையும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைந்து ஸ்லிம்மாக இருக்க முடியும்.
வெந்தயம் சீரகம் சேர்த்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி அடையும்.
பீட்ரூட்டை நறுக்கி அதனுடன் சிறிதளவு சீரகம், எலுமிச்சை ஜூஸ், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து குடித்து வர இரும்பு சத்து குறைபாடு நீங்கும்.
தூதுவளை பூவை சாப்பிட்டு வர மலட்டுத்தன்மை நீங்கும். உயிர் அணுக்கள் பலமாகும். இதனை கடைந்து சமைத்து சாப்பிடுவது ஜலதோஷம் மார்புச் சளி, ஆஸ்துமா, இளைப்பு, இருமல் போன்றவை குணமாகும்.
முருங்கைக் கீரையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் உண்டு. இந்த சத்துக்களை பெறுவதற்கு தினசரி முருங்கைக்கீரை சாப்பிடுவது நல்லது.
முருங்கைக் கீரை உருவிய காம்புகளை தூர எரிந்துவிடாமல் சுத்தம் செய்த ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு ரொம்ப நல்லது.
காளானை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான முக்கியமான அமினோ அமிலங்கள் போதிய அளவு கிடைத்துவிடும். ரத்த சோகையும் வராமல் தடுத்துவிடும்.
தினசரி உணவை அறுசுவையுடனும், பல கலர்களுடன் சமைத்துவந்தால் ருசிக்கு ருசி சத்துக்கு சத்து கிடைக்கும். கெமிக்கல் கலர் உடலுக்கு கெடுதல் செய்யும். பிக்மென் ஒட்ஸ் எனப்படும் நிறமிகள் முதுமையைத் தடுக்கும் திறன் கொண்டவை.
உதாரணமாக பப்பாளி, கீரை, பலாப்பழம் , கேரட் போன்றவை பீட்டாகரோட்டின் எனப்படும். தக்காளி தர்பூசணி மாதுளை போன்றவை லைகோபின் எனப்படும். நாவல் பழம், கத்திரிக்காய், ஊதா முட்டைக்கோஸ் போன்றவை ஆண்டோ சயானிக்ஸ் எனப்படும். இந்த நிறங்கள் இதயநோய், கண், சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
பிற நோய்களை தடுக்கும் துத்தநாகவுப்பு ஓட்ஸில் இருப்பதால் ஓட்ஸ் கஞ்சி குடிக்கும் நோயாளி விரைவில் குணமடைய முடியும். மேலும் ஓட்ஸில் மட்டும்தான் 24 விதமான தாவர உயிர்க்கூறுகள் உள்ளன.