சட்டென செய்யக்கூடிய சுவையான தொக்கு வகைகள் நான்கு!

 tasty thokku vagaikal..
Delicious thokku vagaikal..
Published on

நெல்லிக்காய் தொக்கு

தேவை: 

பெரிய நெல்லிக்காய் – அரை கிலோ, 

கல் உப்பு – கால் கப்,

 மிளகாய்த்தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், 

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: 

நெல்லிக்காயை கழுவித் துடைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவையுங்கள். பின்னர், அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால், துண்டுகளாகப் பிரிந்து, கொட்டை வெளியே வந்துவிடும்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் வறுத்து, நன்கு பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, வேக வைத்த நெல்லிக்காய் விழுதைப் போட்டுக்கிளறி, வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார்.

                   *******

கோங்குரா தொக்கு

தேவை:

புளிச்சக்கீரை – 1 கட்டு,

புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு,

வெல்லம் – ஒரு சிறிய துண்டு,

உப்பு – 1 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்,

பூண்டு – 6 பல்,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

கடுகு – 1 டேபிள்ஸ்பூன்,

வெந்தயம் – 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 15,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

புளிச்ச கீரையை இலைகளாகக் கிள்ளி, கழுவி துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் உலரவிடுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் எடுங்கள். மீந்துள்ள எண்ணெயில் கீரையைச் சேர்த்து, நன்கு வதக்குங்கள். கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள். சுவையான கோங்குரா தொக்கு தயார்.

                    ****

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய கொங்கு நாட்டு சுவைகளும்… ஆரோக்கிய உணவுகளும்!
 tasty thokku vagaikal..

பீட்ரூட் தொக்கு 

தேவை: 

பீட்ரூட் – கால் கிலோ, 

மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், 

எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், 

உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: 

கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: 

வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: 

பீட்ரூட்டை நன்கு கழுவி, தோல் நீக்கித் துருவிக் கொள்ளுங்கள். வெந்தயம், பெருங்காயம், சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அத்துடன் பீட்ரூட் துருவலைச் சேருங்கள். மிதமான தீயில் வைத்து, வேகும்வரை கிளறுங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். சுவையான பீட்ரூட் தொக்கு ரெடி.

                  *******

கோவைக்காய் தொக்கு 

தேவை: 

கோவைக்காய் – கால் கிலோ, 

புளி –  நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 6, கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, 

உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 100 கிராம், 

கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்.

இதையும் படியுங்கள்:
சமையல் டிப்ஸ்: உணவை சுவையாக மாற்ற சில எளிய ரகசியங்கள்!
 tasty thokku vagaikal..

செய்முறை: 

வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய கோவைக்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஆறிய பின் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கி இறக்கினால கோவைக்காய் தொக்கு ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com