கொள்ளை ருசியான நான்கு வகை கொள்ளு ரெசிபிகள்!

Four types of Kollu recipes!
healthy kollu recipes
Published on

கொள்ளு லட்டு

தேவை;

கொள்ளு - 1 கப் 

வெல்லம் - முக்கால் கப் 

நெய் - சிறிதளவு.

ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன் 

தேங்காய்த் துருவல் - கால் கப் 

செய்முறை:

வெல்லத்தை பொடித்து கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.

பிறகு நீரை நன்கு வடித்து, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்தால், சுவையான, சத்தான கொள்ளு லட்டு தயார்.

கொள்ளு சூப் 

தேவை:

கொள்ளு - 2 ஸ்பூன் 

மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை ஸ்பூன் 

நல்லெண்ணெய் - அரை ஸ்பூன் 

பூண்டு - 2 பல் 

தக்காளி பெரியது - 1 

மல்லித்தழை சிறிது 

மஞ்சள் தூள் 1 சிட்டிகை 

உப்பு தேவைக்கேற்ப 

செய்முறை: 

கொள்ளு, மிளகு, சீரகம் மூன்றையும் வறுத்து பொடிக்கவும். பூண்டு, தக்காளி, மல்லித்தழை மூன்றையும் அரைக்கவும். நான்கு கப் நீரில் அரைத்த விழுது, பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், நல்லெண்ணெய் சேர்த்து கரைத்து, கொதிக்க வைக்கவும். இறக்கிய பின் உப்பு சேர்க்கவும். குளிர், மழைக்காலங்களில் சளி பிடிக்காமல் இந்த சூப் காக்கும்.

இதையும் படியுங்கள்:
மசால் வடை சுடுகிறீர்களா? மொறு மொறுப்பான மசால் வடைக்கு சமையல் டிப்ஸ்…
Four types of Kollu recipes!

கொள்ளு பிரியாணி 

தேவை:

கொள்ளு - அரை கப் 

பச்சரிசி - 2 கப் 

தனியா தூள், மிளகாய் தூள் - தலா 1 ஸ்பூன் 

நறுக்கிய வெங்காயம் - 1

பூண்டு - 2 பல் 

தாளிக்க - கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

கொள்ளு தானியத்தை சிறிது நேரம் ஊறவைத்து, களைந்து, வேக வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பூண்டை வதக்கி, வெந்த கொள்ளு தானியம், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி, பச்சரிசியை களைந்து, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, அனைத்தையும் குக்கரில் வேகவைக்கவும். சுவையான கொள்ளு பிரியாணி தயார்.

கொள்ளு துவையல்

தேவை:

கொள்ளு - 1 கப் 

புளி - கோலி குண்டு அளவு 

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன் 

வரமிளகாய் - 3

கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், வாசனையும் கொடுக்கும் சாஸ் மற்றும் ஜாம் வகைகள்!
Four types of Kollu recipes!

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் விட்டு, கொள்ளு தானியத்தை சிவக்க வறுக்கவும். பிறகு அதில் புளி, மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து, கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்கவும். சுவையான கொள்ளு துவையல் தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com