

நூல்கோல் குழம்பு
தேவை:
நூல்கோல் - 4
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
செய்முறை:
முதலில் நூல்கோலின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நூல்கோலை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் நன்கு வேகவைக்க வேண்டும்.
அடுத்து மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
நூல்கோல் நன்கு வெந்ததும், அதில் தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்கவிட வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான நூல்கோல் குழம்பு ரெடி. இதை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
நூல்கோல் பிட்லை
தேவை:
நூல்கோல் - 2,
தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப்,
வர மிளகாய் - 4,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா அரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பில்லை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
நூல்கோலை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். புளியைக் கரைத்து, வடிகட்டி அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நறுக்கிய நூல்கோலைப் போட்டுக் கொதிக்கவிடவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை தனியே குழைய வேகவிடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, நூல்கோலில் சேர்க்கவும். வேகவைத்த பருப்பை சேர்த்துக் கொதிக்க விடவும். கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். சுவையான நூல்கோல் பிட்லை ரெடி. சூடான சாதத்துக்கு இந்த பிட்லை மிகவும் நன்றாக இருக்கும்.
*******
நூல்கோல் பொடிமாஸ்
தேவை:
நூல்கோல் – 4,
வெங்காயம், வர மிளகாய் – தலா 1,
பயத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள்தூள் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நூல்கோலை தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, பயத்தம்பருப்பு, மஞ்சள்தூள், நூல்கோல் சேர்த்து வதக்கி, வெந்ததும் நன்றாகக் கிளறி… தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான நூல்கோல் பொடிமாஸ் தயார்.
நூல்கோல் வேர்கடலைப் பொடி சாதம்
தேவை:
சாதம் - ஒன்றரை கப்
நுல்கோல் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 6
ப. மிளகாய் - 2
கடுகு,உளுந்து - சிறிது
வேர்கடலை - கால் கப் (பொடிதது )
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் போட்டு வதக்கி, நுல்கோல் சேர்த்து கிளறி வெந்ததும் இறக்கி வைக்கவும். பின் சாதத்தைப் பொல பொலவென வடித்து வாணலியில் கொட்டி, நுல்கோல் சேர்த்து புரட்டி, சூடேறியவுடன் மிளகுத்தூள் வேர்கடலைப் பொடி தூவி, லேசாக கிளறி இறக்கிவைக்கவும். இது சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.