
கத்தரிக்காய் தயிர் குழம்பு
தேவை;
தயிர் - 2 கப்
கத்தரிக்காய் - 3
பச்சை மிளகாய் - 2.
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கத்தரிக்காயை தணலில் சுட்டு, தோலை நீக்கி மசிக்கவும். தேங்காய் துருவலை அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மசித்த கத்தரிக்காயை சேர்த்துக்கிளறி, தயிர் ஊற்றி, இறக்கி வைக்கவும். இது தொட்டுக் கொள்ளவும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், சுவையாக இருக்கும்.
கத்திரிக்காய் துவையல்
தேவை:
கத்தரிக்காய் - கால் கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
வர மிளகாய் - 3
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வரமிளகாய், புளி, வெங்காயம், கத்தரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் தாளித்து துவையலில் கொட்டவும். இது டிபனுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
செட்டிநாடு கத்தரிக்காய் மசாலை
தேவை:
கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் - தலா 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
பட்டை, சோம்பு, லவங்கம் - தலா ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம் தக்காளியை நறுக்கவும். வாணலியில் என்னை விட்டு பட்டை, சோம்பு, லவங்கம் தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, கத்தரிக்காய் துண்டுகளை போட்டு, வதக்கவும். பின்னர் ஒரு கப் நீர் விட்டு வேக வைக்கவும். எல்லாம் இணைந்து வந்ததும், இறக்கி வைக்கவும். சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் மசாலை தயார்.
கத்தரிக்காய் மசியல்
தேவை:
கத்தரிக்காய் கால் கிலோ
உருளைக்கிழங்கு பெரியது - 1
புளி - கோலி குண்டு அளவு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வரமிளகாய் - 3
கடுகு, வர மிளகாய் 5 - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கத்தரிக்காயை இரண்டாக நறுக்கி, நீரில் வேகவைக்கவும். வெந்ததும் எடுத்து, தோல் நீக்கி, மசித்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, ஒடித்த வரமிளகாய், தாளித்து, வெங்காயத்தை நறுக்கி போட்டு, வதக்கி புளிக்கரைசலை ஊற்றி சேர்க்கவும் கலவை நன்றாக கொதித்ததும் இறக்கி வைக்கவும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இது வெகு பொருத்தம்.