நாவிற்கினிய நார்த்தங்காய் ரெசிபி வகைகள் நான்கு!

Samayal recipes in tamil
Northangai Recipes
Published on

நார்த்தங்காய் சாதம் 

தேவை:

வேகவைத்த சாதம் - 2 கப்

நார்த்தங்காய் - 2

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

உளுந்தம்பருப்பு - சிறிதளவு

வேர்க்கடலை - தேவைக்கேற்ப

முந்திரி பருப்பு - 4 (துருவியது

இஞ்சி துண்டு - 2 (துருவியது)

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டிஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

ஒரு நார்த்தங்காய் மட்டும் எடுத்து சின்ன பாத்திரத்தில பிழிந்து சாறை எடுத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அடுப்பில கடாயை வைத்து அதில கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலைய போட்டு தாளித்து,  சிவக்க வதக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் வதக்கிய வேர்க்கடலையுடன், கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய்,  மஞ்சள் தூள், உப்பையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்..

பிறகு வதக்கிய கலவையுடன் மல்லித்தழை இலையை பொடியாக நறுக்கி போட்டு,  வதக்கி,  பிழிந்து வைத்துள்ள நார்த்தங்காய் சாறை ஊற்றியதும், வேக வைத்த சாதத்தை போட்டு நன்கு கிளறிவிட்டு, இறக்கி பரிமாறினால் ருசியான நார்த்தங்காய் சாதம் ரெடி.

நார்த்தங்காய் பச்சடி

தேவை:

பொடியாக நறுக்கிய நார்த்தங்காய் - 1 கப்.

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்,

கடுகு - 2 ஸ்பூன்,

புளி - 1 எலுமிச்சை அளவு,

நறுக்கிய பச்சை மிளகாய் - 2 ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப 

எண்ணெய் - கால் கப்.

துருவிய வெல்லம் - கால் கப்,

செய்முறை:

முதலில் நார்த்தங்காயுடன் உப்பு, வெல்லம், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு கொதித்ததும் புளியை கரைத்துச் சேர்க்கவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து, நார்த்தங்காயுடன் சேர்க்கவும்.பரிமாறவும். சுவையான நார்த்தங்காய் பச்சடி ரெடி.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய சமச்சீர் உணவு வகைகள்..!
Samayal recipes in tamil

நார்த்தங்காய் புளிக் குழம்பு

தேவை: 

நார்த்தங் காய் - 1,   

புளி - எலுமிச்சைப்பழ அளவு,  எண்ணெய் - 4 ஸ்பூன், 

 சாம்பார் தூள் - 3 ஸ்பூன்,  கடலை பருப்பு, - 1 ஸ்பூன்  வெந்தயம் - 1 ஸ்பூன்,  

கடுகு - 1 ஸ்பூன்,  உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன் , 

நிலக்கடலை பருப்பு - 1 ஸ்பூன்,  

பொடித்த வெல்லம் - 4 ஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 

நிலக்கடலை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் அனைத்தையும் எண்ணெய் இன்றி வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறவிட்டு, அதை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். 

புளியை நன்கு ஊறவைத்து கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும், நார்த்தங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் 1 ஸ்பூன் கடுகு,  நார்த்தங்காயை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். 

பிறகு அதில் 3 ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை வதக்கவும். பிறகு கரைத்து வைத்த புளியை காயில் சேர்த்து மூடி வைத்து, நன்கு வேகவிடவும். தேவைக்கு சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அரைத்த பொடியை இப்போது வெந்த காயில் சேர்த்து கிளறவும். கடைசியாக வெல்லம்  சேர்த்து கலந்து விடவும். கம கம மணத்துடன் ருசியான நார்த்தங்காய் புளிக்குழம்பு தயார்!

நார்த்தங்காய் ரசம் 

தேவை:

துவரம்பருப்பு - கால்‌ கப்‌

தக்காளி - 1, மஞ்சள்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌

உப்பு - ஒரு டீஸ்பூன்‌

நார்த்தங்காய்‌ சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்‌

பெருங்காயத்தூள்‌ - கால்‌ டீஸ்பூன்‌

ரசப்பொடிக்கு:

தனியா - 3 டீஸ்பூன்‌

துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்‌

மிளகு - ஒரு டீஸ்பூன்‌

சீரகம்‌ - அரை டீஸ்பூன்‌

வர மிளகாய்‌ - 4

தாளிக்க:

எண்ணெய்‌ - கால்‌ டீஸ்பூன்‌, 

கடுகு - கால்‌ டீஸ்பூன்‌, 

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது.

இதையும் படியுங்கள்:
டேஸ்ட்டி வெஜ் மிக்ஸ்ட் சோளப் பணியாரம்!
Samayal recipes in tamil

செய்முறை:

ரசப் பொடிக்கு  வேண்டியவற்றை வறுக்காமல்‌ பொடித்து வைத்துக்‌ கொள்ளவும்‌. துவரம் பருப்பை மஞ்சள் தூள்‌ சேர்த்து வேகவைத்து எடுத்துக்‌ கொள்ளவும்‌. தக்காளியை துண்டுகளாக நறுக்கி ஒரு கப்‌ தண்ணீரில்‌ வேகவைக்கவும்‌. பிறகு வேகவைத்த துவரம்பருப்புடன்  உப்பையும்‌, பெருங்காயத் தூளையும்‌ சேர்த்து கொதி வந்ததும்‌, பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கிவிடலாம்.

பின்னர் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்க வேண்டும். கடைசியாக நார்த்தங்காய்‌ சாற்றை ஊற்றி கலக்கி வைக்கவேண்டும். சுவையான நார்த்தங்காய் ரசம் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com