
கடலைப்பருப்பு பணியாரம்
தேவை:
மைதா மாவு - 2 கப்
கடலைப்பருப்பு - 2 கப்
வெல்லத் தூள்- ஒன்றரை கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 2 ஸ்பூன்
நெய் - ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, சிறது தண்ணீர் ஊற்றி, சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் நெய்யைச் சேர்த்து கலந்து வைக்கவும்.
வேகவைத்த கடலைப்பருப்புடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்ப் தூள் சேர்த்துப் பிசையவும். பிசைந்த பருப்புக் கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார்.
*******
கடலைப்பருப்பு சுய்யம்
தேவை :
கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம்,
பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - கால் லிட்டர்
மேல்மாவுக்கு : மைதா மாவு - 75 கிராம்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு,
சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை:
வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, அடுப்பை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சுவையான கடலைப் பருப்பு சுய்யம் ரெடி.
*******
கடலைப்பருப்பு உசிலி
தேவை:
கடலைப்பருப்பு – முக்கால் கப்,
துவரம்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 3, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கலந்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து. பிறகு தண்ணீரை வடித்து, அவற்றுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து, இறக்கவும். ஆறியதும், அந்த உருண்டைகளை, சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு சுற்று சுற்றி எடுத்தால், உதிர் உதிராக வரும். நறுக்கிய கேரட்டுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். உதிர்ந்த உள்ள புகழ்பெற்ற பருப்புடன் வேக வைத்த கேரட், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். சுவையான, சத்தான கடலைப் பருப்பு உசிலி தயார்.
*****
கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்
தேவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், துருவிய தேங்காய் - கால் கப், துருவிய வெல்லம் - அரை கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ள வேண்டும். வெந்த பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சூடாக இருக்கும்போதே துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளற வேண்டும். கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் தயார்.