healthy Green Lentil Salna
Vegetarian Green Lentil Salna

சால்னா என்றால் அசைவம் மட்டுமா? சுவையான சைவ பச்சைப்பயறு சால்னா செய்வது எப்படி?

Published on

பச்சை பயிறு சால்னா

பச்சைப் பயிறு “சால்னா” என்பது கேரள பாணியில் செய்யப்படும் ஒரு சுவையான, ஆரோக்கியமான குழம்பு வகை. இது சுவையோடு உடலுக்கு நல்ல புரதமும் நார்ச்சத்தும் தரும். இதை செய்ய

தேவையான பொருட்கள்;

பச்சைப் பயிறு – 1 கப்

வெங்காயம் – 1 நடுத்தரம் (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நீளவாக கீறியது)

பூண்டு – 3 பல் (நறுக்கியது)

இஞ்சி – 1 அங்குலம் (நறுக்கியது)

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய்பால் – ½ கப்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: பச்சைப் பயிறை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து சமைக்கவும். குக்கரில் 2–3 விசில் வரை வேகவைத்தால் போதும். அதிகம் குழையாமல் இருக்க பார்த்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சேர்த்து நன்றாக மெலிதாகும்வரை வதக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து 1 நிமிடம் வதக்கவும். வேகவைத்த பச்சைப் பயிறு (சமையல் நீருடன்) மசாலாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை குறைத்து தேங்காய் பால் சேர்த்து, மேலும் 2 நிமிடம் மட்டும் சுட விடவும். கொதிக்க விட வேண்டாம்; இல்லை யெனில் தேங்காய் பால் திரிந்து விடும். மேலும் சிறிது கறிவேப்பிலை தூவி, அடுப்பை அணைக்கவும். பச்சைப் பயிறு சால்னா சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் அல்லது சாதத்துடன் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சமையலில் இந்த ஒரு மசாலாவை சேர்த்தால், அஜீரணம், வாயுத்தொல்லை இனி இல்லை!
healthy Green Lentil Salna

சின்ன வெங்காயம் சட்னி

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் _ 15–20

உளுத்தம்பருப்பு _ 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு _1 ஸ்பூன்

வத்தல் மிளகாய் _ 4–5

பூண்டு _ 3 பல்

சுக்கு _ சிறிதளவு

உப்பு தேவையான அளவு

எண்ணெய் _ 1.5 மேசைக்கரண்டி

இஞ்சி _ சிறிய துண்டு

தண்ணீர் தேவையான அளவு (அரைக்கும் போது)

தாளிக்க:

கடுகு _ ½ மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு _ ½ மேசைக்கரண்டி

கருவேப்பிலை சில இலைகள்

எண்ணெய் _1 மேசைக்கரண்டி

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் சீவி கழுவி வைக்கவும். கடாயில் 1.5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, முதலில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு வறுக்கவும். அதில் வத்தல் மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து, மிதமான தீயில் வெங்காயம் பழுப்பு நிறமாக வரும்வரை வதக்கவும். எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, உப்பும் சேர்த்து சட்னி தயாரிக்கவும்.

இதையும் படியுங்கள்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான சூப்பர் டிப்ஸ்! இந்த உடனடி ஊறுகாய்களை நீங்களே செய்யலாம்!
healthy Green Lentil Salna

வேறு ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றவும்.

இட்லி, தோசை, ஆப்பம், அடை, பொங்கல் போன்றவற்றுடன் பரிமாறலாம். சாதம் கூட இந்த சட்னியுடன் சுவையாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com