
ப்ரூட் ஜாம் கேக்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு மைதா1 கப் கோகோ பவுடர்2 ஸ்பூன் பொடித்த சீனி4 ஸ்பூன் வெஜிடபிள் ஆயில்2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்1 ஸ்பூன் பால்1 கப் ப்ரூட் ஜாம்3 ஸ்பூன்
செய்முறை: ப்ரூட் ஜாம் கேக் செய்வதற்கு முதலில் மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்துக் கொண்டு, அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ளப் பொருட்களின் மேல் ஆயில் ஊற்றிக் கிளறிய பின் அந்தக் கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்திருந்து எடுக்கவும். பிறகு 1 நிமிடத்தில் எடுத்தக் கலவையின் மேல் ப்ரூட் ஜாம்மை வைத்து மீண்டும் 30 வினாடிகள் மைக்ரோவேவில் வைத்துப் பிறகு வெளியே எடுக்க வேண்டும். சூடான, சுவையான ப்ரூட் ஜாம் கேக் தயார்.
வெனிலா கேக்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு மைதா200 கிராம் பொடித்த சர்க்கரை200 கிராம் வெண்ணெய்200 கிராம் முட்டை2 பேக்கிங் பவுடர்1 ஸ்பூன் வெனிலா எசென்ஸ்1 ஸ்பூன் உப்புதேவையான அளவு
செய்முறை: வெனிலா கேக் செய்வதற்கு முதலில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துச் சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு நன்றாக நுரைக்க அடிக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக பொடித்த சர்க்கரையை சேர்த்து அடிக்கவும். பின்பு அதில் முட்டையையும் வெனிலா எசன்ஸையும் சேர்த்து அடிக்கவும். அடித்த கலவையில் மைதாவையும், வெண்ணெய்யையும் கலந்து மைக்ரோவேவ் ஓவனில் உள்ள பேக்கிங் ட்ரேயில் போட்டு 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்து 15-20 நிமிடத்திற்குப் பிறகு வெளியே எடுக்கவும். சுவையான வெனிலா கேக் ரெடி.
சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
மைதா மாவு200 கிராம்
சர்க்கரை150 கிராம்
வெண்ணெய்150 கிராம்
பேக்கிங் பவுடர்1 தேக்கரண்டி
முட்டை4
பால்250 மில்லி
கோக்கோ பவுடர்26 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சாக்லேட் கேக் செய்வதற்கு முதலில் வெண்ணெயுடன் சர்க்கரையைப் போட்டு நன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கி வெண்ணெய், சர்க்கரை சேர்ந்தக் கலவையில் கலக்கவும்.
பிறகு மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் இம்மூன்றையும் சலித்து கலவையில் போட்டு, அதில் பாலை ஊற்றி கலக்கவும். பிறகு பேக்கிங் ட்ரேவை எடுத்து வெண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள கலவையை ட்ரேயின் உயரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு சமமாகப் பரப்பி 30 நிமிடம் பேக் செய்யவும். ஸ்வீட்டான சாக்லேட் கேக் ரெடி.