நாக்கில் நீர் ஊற வைக்கும் பூண்டு பனீர் ரெசிபி! 

Garlic paneer recipe
Garlic paneer recipe
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

பனீர் வைத்து பலவிதமான உணவுகளை செய்யலாம். அப்படி செய்யப்படும் உணவுகளில் ஒன்றுதான் பூண்டு பனீர். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். பூண்டு பனீர் சப்பாத்தி, நான், ரொட்டி போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைடு டிஷ் ஆக இருக்கும். இப்போது இந்த சுவையான பூண்டு பனீர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பனீர் - 200 கிராம் 

  • பூண்டு - 10-12 பற்கள் 

  • வெங்காயம் - 1 

  • தக்காளி - 1

  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 2 

  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

  • மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • தனியா தூள் - 1 தேக்கரண்டி

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு கிரீம் பனீர் கிரேவி சாப்பிட்டிருக்க மாட்டீங்க… வேற லெவல் சுவை! 
Garlic paneer recipe

செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

  2. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. அடுத்ததாக, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும்.

  5. பின்னர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கிய, சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

  6. இப்போது, நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர், 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்தால், பூண்டு பனீர் தயார்! இதை சப்பாத்தி, நான், ரொட்டியுடன் பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
செவ்வாழைப் பணியாரம்: ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ரெசிபி! 
Garlic paneer recipe

இந்த சுவையான ரெசிபியை இன்று முயற்சித்துப் பார்த்து, உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

logo
Kalki Online
kalkionline.com