
பனீர் கிரேவி என்பது வட இந்தியாவின் பிரபலமான ஒரு உணவாகும். தயிர், கிரீம் மற்றும் பல்வேறு மசாலா பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. திருமணங்கள், விழாக்கள் என எல்லா சிறப்பு நிகழ்வுகளிலும் இது நிச்சயம் பரிமாறப்படும். இந்தப் பதிவில் பனீர் பசந்தாவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
200 கிராம் பனீர்
1 கப் தயிர்
1/2 கப் கிரீம்
2 பெரிய வெங்காயம்
2 பூண்டு பற்கள்
1 இஞ்சி துண்டு
2 பெரிய தக்காளி
2 பச்சை மிளகாய்
கருவேப்பிலை ஒரு கொத்து
1 டீஸ்பூன் கரம் மசாலா
1/2 டீஸ்பூன் கசூரி மேத்தி
1/4 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் கரம் மசாலா
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் பன்னீர் தூண்டுகளை சேட்டு 3 நிமிடங்கள் வேகவைத்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த மசாலா பேஸ்ட்டை சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
வதங்கிய மசாலாவில் தயிர் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு கலக்கவும். டீயை மிதமாக வைத்து தண்ணீர் பிரியாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அடுத்ததாக வேகவைத்த பன்னீர் துண்டுகளை கிரேவிக்குள் சேர்த்து மெதுவாகக் கிளறவும். பின்னர், கரம் மசாலா, கசூரி மேத்தி, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இறுதியாக கிரேவி கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் தீயை அணைத்து கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
இந்த ரெசிபியை சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும். அரிசி சாதத்தில் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். எனவே, இந்த அட்டகாசமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.