25 நாள் ஆகுமா சிலிண்டர் வர? இந்த ஐடியாவ ஃபாலோ பண்ணுனா ஒரு சிலிண்டர் 3 மாசம் வரும்!

gas cylinder shortage
gas cylinder shortage
Published on

மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் தலைகாட்ட முடியவில்லை. இந்த தாக்குதலை சமாளிக்குறதுக்குள்ள 'ப்பா 25 நாள் கழிச்சுதான் கேஸ் புக் பண்ண முடியுமாம்.

'இன்னைக்கு புக் பண்ணா சர்வர் வேலையே செய்யல'

'அடுத்த வீட்டு வனஜாவுக்கு புக் பண்ண கேஸ் 15 நாள் ஆச்சாம் வரலையாம்'!

'எங்க வீட்ல குடிக்க குளிக்க எல்லாம் சுடுதண்ணிதான்' என்ன பண்றதுன்னு தெரியல அப்படி இப்படின்னு... எங்கும் கேஸ் தட்டுப்பாடு புலம்பல் பேச்சுத்தான்.

தயவு செய்து புலம்பலை நிறுத்துங்கள். உங்களால் முடியும் என்பதை நீங்களே உணரும் போதுதான் அழகாகும்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து விடுபட நம்மால் முடிந்த சில விஷயங்களை செய்யலாம்.

சிறந்த பிராண்ட், அதிரடி வாட்டேஜ் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் இண்டக்ஷன் அடுப்புகள் இப்போது இவ்வளவு மலிவா? - இப்போதே முந்துங்கள்!

தண்ணீர் சுட வைக்க கெட்டிலை உபயோகப்படுத்தலாம்.

கொஞ்ச நாட்களுக்கு தோசை சப்பாத்திக்கு விடுமுறை அளித்து பொங்கல், உப்புமா என விரைவில் செய்யும் சமையலுக்கு மாறலாம்.

அப்பளம், வத்தல், பஜ்ஜி, போண்டா போன்ற பொரித்த உணவுகளுக்கு தடா போடலாம். (உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கொலஸ்ட்ரால் குறையும்)

முதல் நாளே என்ன சமையல் செய்யப்போகிறோம் என்பதை முடிவு பண்ணிக்கொண்டு அடுப்பை பத்த வைப்பது புத்திசாலித்தனம். கேஸ் 'ஆன்' பண்ணிட்டு யோசிக்கிறதை தவிர்க்கலாம்.

சாம்பார் குழம்புக்கு பதிலாக எள்ளு பொடி, வேர்க்கடலை பொடி, பருப்பு பொடி, மல்லித் துவையல், புதினா துவையல் செய்து கொண்டு சோற்றில் பிசைந்து சாப்பிடலாம். (மல்லி உடல் சூட்டை தணிக்கும்)

ஒரு கைப்பிடி காய்ந்த திராட்சை தண்ணீரில் போட்டு மிக்ஸியில் மைய அரைத்து ஜூஸாக குடிக்க உடல் சூடு குறையும்.

ஒரு முளைகட்டிய பயறை கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். (ஜீரண சக்தியும் அதிகமாகும்).

இதையும் படியுங்கள்:
கேஸ் இல்லாமலே சமைக்கலாம் வாங்க! சத்து குறையாத 'நோ ஆயில், நோ பாயில்' உணவுகள்!
gas cylinder shortage

ஒருவேளை உணவை பழங்களைக் கொண்டு செய்யும் மில்க் ஷேக் ஸ்மூத்தி செய்தும்/வெள்ளரிக்காய் கேரட் வெங்காயம் போன்ற காய்கறிகளில் சாலட் செய்தும் எடுத்துக் கொள்ளலாம். (அதில் வறுத்த வேர்க்கடலையை போட்டுக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்)

'ஆன் பழங்கள் எ டே.., கீப்ஸ் தி டாக்டர் அவே' இதெல்லாம் டூ இன் ஒன் வெயில் + கேஸ் தட்டுப்பாடு இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்கலாம்.)

காப்பி, டீயை மொத்தமாக போட்டுவிட்டு பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து தேவைப்படும்போது குடிக்கலாம்.

சிறுதானியங்களில் கஞ்சி செய்து சாப்பிடலாம்.

முக்கியமா எல்லோரும் ஒரே நேரத்தில் உணவருந்த முயற்சி செய்யலாம். தேவையில்லாமல் சூடுபண்ண தேவையிராது.

எல்லாவற்றிற்கும் மேலாக தயவு செய்து கேஸ் தட்டுப்பாடு என்ற பீதியை நம்பாதீர்கள். அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை மட்டும் யோசிங்க... காலைப் பொழுதை கொஞ்சமே கொஞ்ச நேரம் கேஸ் சிக்கனத்துக்காக ஒதுக்குங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

சிறந்த பிராண்ட், அதிரடி வாட்டேஜ் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஸ்மார்ட் இண்டக்ஷன் அடுப்புகள் இப்போது இவ்வளவு மலிவா? - இப்போதே முந்துங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com